மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் தற்போது தடபுடலாக தயாராகிவிட்டது. இந்த மாத இறுதியில் திரைக்கு வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பலமொழிகளில் பான் இந்தியா படமாக கலக்க வருகிறது. ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என நட்சத்திரங்கள் பலரும் குழுமியுள்ள இந்த படம் சோழ வம்ச வரலாறு பொன்னியின் செல்வன் நாவலை தழுவி உருவானதாகும். பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் இந்த நாவலை படமாக்க பல தலைமுறை நடிகர்கள் முயற்சித்து விட்ட நிலையில் தற்போது இதனை நனவாக்கி உள்ளார் இயக்குனர் மணிரத்னம்.