கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தமன்னா. விஜய், அஜித், விஜய் சேதுபதி என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். மேலும் கதைக்கு தேவை இல்லை என்றாலும், பட காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் கவர்ச்சி நடிகைகளையே பின்னுக்கு தள்ளும் அளவிற்கு கிளாமரை தூக்கலாக காட்டி வரும் நடிகைகளில் இவரும் ஒருவர்.
அந்த வகையில், இவர் தேர்வு செய்து நடித்த நவம்பர் ஸ்டோரீஸ் வெப் சீரிஸுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் கிடைத்தது மட்டும் இன்றி, தமன்னாவின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது.
தமன்னா தற்போது நடித்து வரும் ஹிந்தி படங்களில் ஒன்று 'பிளான் A பிளான் B' இந்த படத்தில் இடம்பெறும் Talli பாடலுக்கு படு ஹாட்டாக, பப்பில் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார் தமன்னா.