
டோலிவுட் திரையுலகில் மிஸ்டர் மிஸ்டர் பர்ஃபெக்ட் என பெயர் எடுத்தாதவர் நடிகர் மகேஷ் பாபு. சர்ச்சைக்கு அப்பாற்பட்ட பிரபலமாக உள்ள இவர், பல சமயங்களில் தன்னை ஒரு சிறந்த கணவராகவும், நல்ல தந்தையாகவும் வெளிகாட்டிக்கொள்ள மறந்து இல்லை. சினிமாவுக்கு பின்னர் இவருடைய குடும்பம்தான் அவருடைய உலகம். ஓய்வு நேரம் கிடைத்தால் குடும்பத்துடன் சுற்றுலா செல்வார். இல்லையென்றால் வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் பொழுதை கழிப்பார். இது தான் அவர் அதிகம் விரும்புவதும்.
என்ன தான் மகேஷ் பாபு ஒரு சினிமா பிரபலம் என்றாலும், தனியார் விருந்துகளில் இவரை பார்ப்பது மிகவும் அரிது. வீட்டில் தன்னுடைய குழந்தைகளுடன் குழந்தையாக மாறி... கௌதம், சித்தாராவுடன் விளையாடுவார். புதிய படங்கள், மற்றும் புத்தகங்களைப் படிப்பது அவருக்குப் பிடித்த பொழுதுபோக்கு. அதேபோல் சமூக ஊடகங்களிலும் தொடர்ந்து ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
இவை அனைத்தையும் விட மகேஷ் பாபு ரசிகர்கள் பார்வையில் அழகானவர். நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஹீரோ. இவர் திருமணத்திற்கு முன்பும் எந்த ஒரு சர்ச்சையில் சிக்காத ஒரு பிரபலமாகவே இருந்தார். எனவே தான், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் நந்தமூரி பாலகிருஷ்ணா, மகேஷ் பாபுவை தன்னுடைய மருமகனாக்கி கொள்ள விரும்பினார்.
இதுகுறித்து மகேஷ் பாபுவிடம் பாலகிருஷ்ணா. தன்னுடைய மூத்த மகள் பிரம்மணியை திருமணம் செய்து கொள்ள உங்களுக்கு விருப்பமா என கேட்டுள்ளார்? சற்றும் இதை எதிர்பாராத மகேஷ் பாபு மெதுவாக பாலகிருஷ்ணாவின் திட்டதை நிராகரித்துள்ளார்.
டாப் 10 TRP-யில் விஜய் டிவி தொடர்களை பந்தாடிய சன் டிவி! புதிய சீரியலால் சறுக்கிய 'சிங்கப்பெண்'!
அப்போது மகேஷ் பாபு நடிகை நம்ரதாவை காதலித்து வந்ததால் தான் பிரம்மணியை திருமணம் செய்து கொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாலகிருஷ்ணா பிரம்மணியை, லோகேஷுக்கு திருமணம் செய்து வைத்தார். மகேஷ் திருமணமான இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நாரா லோகேஷ்-பிரம்மணி திருமணம் நடந்தது. பாலகிருஷ்ணா மகேஷை மருமகனாக ஆக்க முயன்றதாக இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை என்றாலும் , தெலுங்கு மீடியாக்களில் இந்த செய்தி அதிகம் பேசப்படும் ஒன்றாக இருந்தது.
மகேஷ் பாபு வம்சி படப்பிடிப்பில் தன்னுடன் நடித்த நம்ரதாவை காதக துவங்கினார். நம்ரதாவும் காதலில் மிகவும் உறுதியாக இருந்த நிலையில், 2005 ஆம் ஆண்டு நமிரதாவை மகேஷ் பாபு ரகசிய திருமணம் செய்து கொண்டார். இரு குடும்பத்தினரும் திருமணத்தில் கலந்து கொண்ட போதிலும், மகேஷ் திருமணம் குறித்த தகவல் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. மேலும் இவர்கள் திருமணத்தில் மிகவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் தான் இந்த தகவல் ஊடகங்களுக்கு தெரியவந்தது.
சூர்யா - ஜோதிகா, அஜித் - ஷாலினி, போல் திரையுலகமே மெச்சும் வகையில் வாழ்ந்து வருகிறார்கள். மகேஷ் பாபு நடிகர் என்பதை தாண்டி, சமூக சேவைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். ஏழை குழந்தைகளின் மருத்துவ உதவி, அறுவை சிகிச்சை, கிராமங்களை தத்தெடுத்து அடிப்படை உதவிகளையும் செய்து வருவதால்... மகேஷ் பாபு சினிமாவில் மட்டும் அல்ல நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாகவே பார்க்கப்படுகிறார்.
பாலிவுட் படத்தில் ஷாருக்கானுடன் நடிக்க No சொன்ன கமல்! காரணம் என்ன?
தற்போது மகேஷ் பாபு தனது 29வது படத்திற்கு தயாராகி வருகிறார். இயக்குனர் ராஜமௌலி இயக்கும் இந்த படம் ஒரு பான் இந்தியா படமாக உருவாக உள்ளது. சுமார் ரூ.800 கோடி இந்த படத்தின் பட்ஜெட் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில், எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் தனது 29வது படத்தின் அப்டேட்டை வழங்கினார். பொதுவாக மூன்று முதல் நான்கு வாரங்களில் கதையை தயார் செய்து விடுவோம். மகேஷ் பாபுவுக்காக கதையை இறுதி செய்ய 2 ஆண்டுகள் ஆனது என்று கூறினார்.
ஜனவரி மாதம் முதல் 29வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று விஜயேந்திர பிரசாத் முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டார். 29வது படம் ஒரு காட்டு அதிரடி சாகச நாடகம். உலகம் முழுவதும் சுற்றித் திரியும் சாகசக்காரராக மகேஷ் பாபுவின் கதாபாத்திரம் இருக்குமாம். ஏற்கனவே மகேஷ் பாபு தனது தோற்றத்தை மாற்றி வருகிறார். அவர் அடர்ந்த தாடி, நீண்ட முடியுடன் காணப்படுகிறார். எனவே இவரது 29வது படத்தில் மகேஷ் பாபுவின் தோற்றத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.