"சண்டைக்கு வரமாதிரியே பேசுறாங்க" ஜாக்குலினை டார்கெட் செய்யும் சுனிதா - கூட்டணியின் இணையும் அன்ஷிதா!

Ansgar R |  
Published : Oct 10, 2024, 06:27 PM ISTUpdated : Oct 10, 2024, 07:49 PM IST

Sunita Vs Jacquline : விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 6ம் தேதி துவங்கிய நிலையில் 4வது நாளிலேயே பயங்கரமாக ஆட்டம் சூடுபிடித்து வருகின்றது.

PREV
14
"சண்டைக்கு வரமாதிரியே பேசுறாங்க" ஜாக்குலினை டார்கெட் செய்யும் சுனிதா - கூட்டணியின் இணையும் அன்ஷிதா!
jacquline

உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த ஏழு சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிலையில், இந்த முறை "ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு" என்கின்ற பஞ்ச் டயலாக்குடன் கலக்கலாக களம் இறங்கி அசத்தி வருகின்றார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. அதுவும் கடந்த அக்டோபர் மாதம் ஆறாம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் அறிமுகமாகும் பொழுதே, அவர்கள் பலரிடம் Thug Life காட்டி மிரட்டி விட்டிருக்கிறார் மக்கள் செல்வன் என்று கூறினால் அது சற்றும் மிகையல்ல. இந்நிலையில் 4 நாட்கள் மட்டுமே ஆன நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்கனவே உச்சகட்ட வேகத்தில் பயணித்து வருகிறது.

டாப் 10 TRP-யில் விஜய் டிவி தொடர்களை பந்தாடிய சன் டிவி! புதிய சீரியலால் சறுக்கிய 'சிங்கப்பெண்'!

24
Sachana

இதுவரை எந்த சீசனலையும் இல்லாத ஒரு விஷயமாக தொடக்க நாளிலிருந்து ஆண்கள் ஒன்பது பேர், பெண்கள் 9 பேர் என்று இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு, பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதுவே மிகப்பெரிய ட்விஸ்ட் கொடுத்த நிலையில், நிகழ்ச்சி தொடங்கிய 24 மணி நேரத்திலேயே, ஒரு போட்டியாளர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிரபல நடிகர் விஜய் சேதுபதியின் "மகாராஜா" திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்து அசத்தியிருந்த சஞ்சனா தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து முதல் ஆளாக வெளியேறினார். உண்மையில் அவருடைய வெளியேற்றும் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடக்கத்திலேயே சர்ச்சையில் இருந்து தான் தொடங்கியது.

34
Ravinder Chandrasekar

அதைத் தொடர்ந்து இரண்டாம் நாள் கொடுக்கப்பட்ட ஒரு பிசிக்கல் டாஸ்கில், போட்டியாளர் ரவீந்திரன் சந்திரசேகருக்கு காலில் அடிபட்டது. அவரால் நடக்கக்கூட முடியாமல் சென்ற நிலையில், அவர் உடனடியாக மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டு பிக் பாஸ் வீட்டில் தனது ஆட்டத்தை தொடர்ந்தார். அதே நாளில் பிரபல தொகுப்பாளர் தீபக்கிற்கும் காலில் அடிபட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் உச்சகட்டமாக நடிகர் ரஞ்சித்திற்கும், ரவிந்தருக்கும் சண்டை மூண்டது (அப்புறம் அதை பிராங்க் என்று சொன்னது வேற கதை). இப்படி பிக் பாஸ் வீடு துவக்கத்திலேயே சூடுபிடித்து வரும் நிலையில், ஆண்கள் அணி பரவாயில்லப்பா, என்று சொல்லும் அளவிற்கு பெண்கள் அணியில் கோஷ்டி மோதல் துவங்கியுள்ளது.

44
Jacquline

அந்த வகையில் ஏற்கனவே தொகுப்பாளி ஜாக்குலினுக்கும், நடிகை சுனிதாவிற்கும் ஆரம்பத்தில் இருந்தே போட்டோ போட்டியாக இருந்து வருகிறது. இந்த வகையில் இன்று வெளியான விஜய் டிவியின் ப்ரோமோவில், ஜாக்லின் மீது ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டை சுனிதா முன் வைத்திருக்கிறார். அதாவது பொதுவாக பேசும் பொழுதே ஏதோ சண்டையை இழுப்பதற்கு பேசுவது போல பேசுகிறார் ஜாக்குலின். இப்படியே செய்து கொண்டிருந்தால் மக்கள் அவரை விரைவில் போட்டியிலிருந்து வெளியேற்றுவார்கள் என்று சுனிதா கூறுகின்றார். அதற்கு கொஞ்சம் கூட மறுப்பு தெரிவிக்காமல், ஒருவேளை அப்படி சண்டை போட்டுக்கொண்டே இருந்தால் தான் மக்களுக்கு பிடிக்கும் என்று ஜாக்குலின் நினைக்கிறாரோ என்று சுனிதாவோடு இணைந்து கூட்டணி போட்டு ஜாக்குலினை வசைபாடியுள்ளார் அன்ஷிதா.

விஜயின் மெகா ஹிட் படம்; நான் நடிச்ச மொத்த காட்சிக்கும் கத்திரி போடப்பட்டது - வருத்தப்பட்ட டாப் நடிகை!

Read more Photos on
click me!

Recommended Stories