அந்த நடிகை வேறு யாரும் அல்ல, சின்னத்திரை மூலம் கலை உலகில் அறிமுகமாகி, இன்று மிகப்பெரிய வெள்ளித்திரை நட்சத்திரமாக மாறி இருக்கின்ற தேவதர்ஷினி தான். கடந்த 2003ஆம் ஆண்டு தமிழில் வெளியான "பார்த்திபன் கனவு" திரைப்படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் தேவதர்ஷினி. தான் நடித்த அந்த முதல் திரைப்படத்திற்காகவே தமிழக அரசு வழங்கும் மாநில விருதை வென்றவர். சிறந்த காமெடி நடிகை என்கின்ற தலைப்பில் அவருக்கு அந்த விருது வழங்கப்பட்டது.
தொடர்ச்சியாக நல்ல பல படங்கலில் கடந்த 21 ஆண்டுகளாக நடித்து வரும் தேவதர்ஷினி, சிறந்த காமெடி நடிகை என்கின்ற பிரிவில் மூன்று முறை தமிழக அரசின் மாநில விருதுகளை வென்றிருக்கிறார். இந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் ஏற்கனவே அவருடைய நடிப்பில் "யாவரும் வல்லவரே", PT சார், ராயன், ரகு தாத்தா, "லப்பர் பந்து" மற்றும் "மெய்யழகன்" உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் அவர் நடித்திருக்கிறார். இந்த சூழலில் கடந்த 2017 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான "மெர்சல்" திரைப்படத்திலும் அவர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.