முதல் பாகத்தில் கமலஹாசனின் கதாபாத்திரம் மிகக் குறைந்த அளவிலேயே கட்டப்பட்டிருந்தாலும், இரண்டாவது பாகத்தில் கமலுக்கான காட்சிகள் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கமலஹாசனை வில்லனாக நடிக்க வைக்க, கடந்த 2002-ஆம் ஆண்டு இயக்குனர் பரா கான் முயற்சித்த நிலையில், அந்த வாய்ப்பை கமல் நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி ஷாருக்கான் நடிப்பில், பரா கான் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'மெயி ஹூன் நா'. இந்த படத்தில் சுஷ்மிதாசன் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக கமலஹாசன் நடித்தால் நன்றாக இருக்கும் என எண்ணிய இயக்குனர் பரா கான் கமலஹாசனை சென்னையில் சந்தித்து பேசி உள்ளார். அப்போது தன்னுடைய அலுவலகத்திற்கு பரா கானை வர வைத்த கமல்ஹாசன், அவருக்கு அறுசுவை விருந்து கொடுத்து உபசரித்துள்ளார். ஹீரோவாக நடித்து வருவதால் வில்லன் கதாபாத்திரத்தில் தன்னால் நடிக்க முடியாது என கூறியுள்ளார்.