Published : Oct 10, 2024, 02:08 PM ISTUpdated : Oct 10, 2024, 02:16 PM IST
வைரமுத்து வரிகளில், MSV இசையமைத்த பாடலுக்கு... மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து அந்த பாடலை ஹிட் செய்துள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறது? அது எந்த பாடல், என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
கண்ணதாசன், வாலி, வரிசையில்... பெரியவர்கள் வரை சிறியவர்கள் வரைக்கும் அனைவரையும் கவர்ந்திழுக்க கூடிய பாடல் வரிகளை எழுதி, தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் 'வைரமுத்து'. இவரை 1980-ஆம் ஆண்டு, 'நிழல்கள்' படத்திற்கு பாடல் எழுத வாய்ப்பு கொடுத்தவர் இளையராஜா தான். வைரமுத்து வரிகளில் - இசையானி இளையராஜா இசையில் இடம்பெற்ற 'இது ஒரு பொன் மாலை பொழு' என்கிற பாடல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதன் காரணமாக அடுத்தடுத்து பல பாடல்கள் எழுத வாய்ப்பு கிடைத்தது.
25
Vairamuthu Cinema Carrier
1981, 1982-ஆம் வருடங்களில் சுமார் 10 படங்களுக்கும் மிகாமல் பாட்டு எழுதும் வாய்ப்பை பெற்றார் வைரமுத்து . குறிப்பாக வைரமுத்துவின் தனித்துவமான வரிகள் இளவட்ட ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. இதுவரை சிறந்த பாடலாசிரியருக்கான 6 தேசிய விருதுகளை வென்றுள்ள வைரமுத்து, கலைமாமணி விருது, சாகித்ய அகாதமி விருது, பத்ம பூசன் விருது போன்ற தலைசிறந்த விருதுகளுக்கு சொந்தக்காரராக உள்ளார்.
மேலும் கவிதை தொகுப்பு, சுய வரலாறு, கட்டுரைகள், புதினம், போன்றவற்றை எழுதி உள்ளார். பொதுவாக பாடலாசிரியர்கள், ஒரு பாடலில் உள்ள வரிகளை... வேறு ஒரு பாடலில் சேர்ப்பது வழக்கம் தான். ஆனால் எம்.எஸ்.வி-காக எழுதி... அவர் இசையமைத்த அதே பாடலை, ஏ.ஆர்.ரகுமானுக்கு கொடுத்து ஹிட் கொடுக்க வைத்துள்ளார் வைரமுத்து.
45
Pudhiya Mugam Movie
இயக்குனர் சுரேஷ் சந்திரா மேனன் இயக்கத்தில், 1993-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 'புதிய முகம்'. இந்த படத்தில், அவரே ஹீரோவாகவும் நடிக்க, மற்றொரு ஹீரோவாக வினீத் நடித்திருந்தார். கதாநாயகியாக ரேவதி நடித்திருந்தார். நடிகை கஸ்த்தூரி கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இடம்பெற்ற 'கண்ணுக்கு மை அழகு' என்கிற பாடல் இரண்டு முறை இடம்பெற்றிருக்கும். தற்போது வரை பல ரசிகர்களால் ரசிக்கப்படும் இந்த பாடலுக்கு தான் ஏற்கனவே, MSV இசையமைத்துள்ளார்.
அதாவது 1986-ல் டிடி தொலைக்காட்சியில் இடம்பெற்ற ஒரு நிகழ்ச்சியில்.. வைரமுத்து மற்றும் எம்.எஸ்.வி இருவரும் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் வைரமுத்து ஸ்பாட்டில் எழுதி கொடுத்த பாடலுக்கு, எம்.எஸ்.வி இசையமைத்து... அந்த பாடலை வாணி ஜெயராம் மற்றும் ஜெய சந்திரனை வைத்து பாட வைத்துள்ளார். இந்த பாடல் டிவி சேனலுடன் செல்ல கூடாது என.. இதே பாடல் வரிகளை சுமார் 7 வருடங்களுக்கு பின் ஏ.ஆர்.ரகுமானுக்கு கொடுக்க... அந்த பாடல் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.