தேசிய விருது அறிவிக்கப்பட்டும் வாங்க மறுத்த சிவாஜி கணேசன் - காரணம் என்ன?

First Published | Oct 10, 2024, 1:00 PM IST

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இதுவரை தேசிய விருதே வாங்கியதில்லை என பலரும் நினைத்திருக்கலாம், ஆனால் அவரும் ஒருமுறை தேசிய விருதை வென்றிருக்கிறார்.

Sivaji ganesan

தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் என்றால் அது சிவாஜி கணேசன். அவரைப்போல ஒரு நடிகரை தமிழ் சினிமா கண்டதில்லை. ஒரு நடிகருக்கு மிகப்பெரிய அங்கீகாரமே அவர் வாங்கும் விருதுகள் தான். அப்படி இந்தியாவில் திரைத்துறையினருக்கு மிக உயரிய விருதாக கருதப்படுவது தேசிய விருது தான். அவ்விருதை கமல்ஹாசன், எம்.ஜி.ஆர் போன்ற ஜாம்பவான் நடிகர்கள் வென்றிருந்தாலும், அது சிவாஜி கணேசனுக்கு கடைசி வரை கிடைக்காமல் போனது.

Sivaji ganesan Refuse to get National Award

சிவாஜிக்கு தேசிய விருது வென்றதே இல்லை என அனைவரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவரும் தேசிய விருது வென்றிருக்கிறார் என்பது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவ்விருதை அவர் வாங்க மறுத்திருக்கிறார். அதற்கு முக்கிய காரணமே கமல்ஹாசன் தானாம். சிவாஜி கணேசன் கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், தெய்வமகன், திருவிளையாடல், பராசக்தி என பல மாஸ்டர் பீஸ் படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும், அவர் துணை கதாபாத்திரத்தில் நடித்த படத்திற்கு தான் அவருக்கு தேசிய விருது கிடைத்தது.

இதையும் படியுங்கள்... அப்போ பிளாப்; இப்போ டாப்! கொண்டாட தவறிய கமலின் மாஸ்டர் பீஸ் படங்கள் ஒரு பார்வை

Tap to resize

Kamalhasan and Sivaji Ganesan

அவர் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை வென்ற திரைப்படம் வேறெதுவுமில்லை கமல்ஹாசன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஹீரோவாக நடித்த தேவர் மகன் படத்துக்கு தான். அப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதும் முதன்முறையாக அவ்விருதை வாங்க உள்ள சந்தோஷத்தில் புதிதாக துணி எடுத்து அதை தைக்க கொடுத்திருக்கிறார் சிவாஜி கணேசன். தேசிய விருதை வாங்க செல்ல சிவாஜி தயாராகி வந்த சமயத்தில் கமல்ஹாசன் அவரை சந்தித்திருக்கிறார்.

Thevar Magan

அப்போது நீங்கள் இந்த தேசிய விருதை வாங்க வேண்டாம் என கூறி இருக்கிறார் கமல். உடனே சிவாஜி, நான் அதற்காக சட்டையெல்லாம் தைக்க கொடுத்துவிட்டேனே என சொன்னதும், துணை நடிகர் பிரிவில் நீங்கள் விருது வாங்கலாமா, அதைவிட பெரிய விருது ஒன்னு இருக்கு, தாதா சாகேப் பால்கே விருதுனு அதற்கு பெயருண்டு அந்த விருதை உங்களுக்கு அறிவிக்கும் போது நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னதும், சிவாஜியும் தேசிய விருதை வாங்க மறுத்துவிட்டாராம். அதன்பின்னர் 1997-ம் ஆண்டு சிவாஜி கணேசனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... ஒரே ஒரு ஓட்டில் ஏ.ஆர்.ரகுமானிடம் தேசிய விருதை பறிகொடுத்த இளையராஜா!!

Latest Videos

click me!