தல அஜித்தின் நியூ லுக் புகைப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பகிர்ந்துள்ள நிலையில்... இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருகிறது.
தல அஜித்தின் 'விடாமுயற்சி' வெளியீட்டிற்காக பல ரசிகர்கள் கார்திக்கிருக்கும் நிலையில்... அஜித்தின் 'குட் பேட் அக்லி' படம் குறித்த அப்டேட் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இந்நிலையில் அஜித் ஹாலிவுட் நடிகரை போல்... கோட் சூட்டில் கலக்கும் புகைப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட அது படு வைரலாக பார்க்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
25
Vidamuyarchi Release
அஜித் நடிப்பில் கடைசியாக 'துணிவு' படம் வெளியான நிலையில்... இதை தொடர்ந்து, அஜித் நடிக்க கமிட் ஆன 'விடாமுயற்சி', இயக்குனர் விக்னேஷ் சிவனின் கதை சொதப்பலால் சில நாட்கள் தள்ளி போக, பின்னர் அஜித் தன்னுடைய பைக் ரெய்டில் பிஸியானார். பின்னர் ஒருவழியாக... அஜித்தின் அடுத்த பட இயக்குனர் மகிழ் திருமேனி என தீர்மானத்திற்கு வந்த லைகா நிறுவனம் அதை அதிகார பூர்வமாக அறிவித்தது. இதை தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் துவங்கியது. பெரும்பாலும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு 70-சதாவீதத்திற்கும் மேல் அஜர்பைஜானில் படமாக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள காட்சிகள் மட்டுமே மற்ற நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. அதே போல் ஒரே ஒரு சண்டை காட்சியை மட்டும் படக்குழு சென்னையில் படமாக்கி உள்ளனர்.
90 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே மீதம் உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இந்த படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் ஒருபுறம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. அஜித் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து முடிக்கும் முன்பே... ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்தில் நடிக்க கமிட் ஆனார். இந்த படமும் கிட்ட தட்ட 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது.
45
Aadhik Ravichandran
மேலும் இந்த ஆண்டு அஜித் நடிப்பில் ஒரு படம் கூட வரவில்லை என்றாலும்... அடுத்த ஆண்டு துவக்கத்திலே பொங்கல் ரிலீசாக விடாமுயற்சி படத்தையும், தல பிறந்தநாள் பரிசாக 'குட் பேட் அக்லி' படத்தையும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக கார் ரேஸ் போட்டிக்கு தயாராகி வந்த அஜித் தற்போது மீண்டும் 'குட் பேட் அக்லி' படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
இந்த படத்தின் ஷூட்டிங் Madrid நகரில் நடைபெற்று வருவதாகவும், இதற்காக அஜித் செம்ம ஸ்டைலிஷாக மாறி ஹாலிவுட் ஹீரோக்களுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் உள்ள, புகைப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம், தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.