பிக்பாஸ் சீசன் 8 வீட்டில் இருந்து வெளியேறப்போவது இந்த மூவரில் ஒருவரா?

First Published | Oct 10, 2024, 11:24 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர் யார் என்பதை போட்டியாளர்கள் கணித்து கூறும் ப்ரோமோ வெளியாகி உள்ளது.
 

Bigg Boss Tamil season 8

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி அக்டோபர் 6-ஆம் தேதி துவங்கிய நிலையில்... போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் முட்டி மோதிக்கொண்டு விளையாடி வருவதை பார்க்க முடிகிறது. கமல்ஹாசனுக்கு இணையாக விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா? என்கிற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்த நிலையில், 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்கிற பழமொழிக்கு ஏற்ப.. 108 நாள் நடக்கும் இந்த நிகழ்ச்சியின் நம்பிக்கையை ஒரே நாளில் ரசிகர்கள் மனதில் விதைத்தார். 

Bigg boss Tamil First Elimination

காரணம், கமல்ஹாசனை எந்த ஒரு விஷயத்திலும் இமிடேட் செய்யாமல்... தனக்கே உரிய பாணியில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியது ரசிகர்கள் மனதை கவர்ந்தது. அதே போல்... அர்னவ், ரஞ்சித், அருண் பிரசாத் ஆகியோருக்கு நக்கலாக விஜய் சேதுபதி கொடுத்த பதில்கள் அல்டிமேட் தக் லைஃப் என நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

ஆத்தாடி! ஒரே ஒரு டியூன் போட்டுட்டு.. 6 பாடலுக்கு அட்ட காப்பி அடித்த இளையராஜா!

Tap to resize

Ranjith

தன்னுடைய பேட்டிகளில் கேள்வி எழுப்பினால் நச்சுனு கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லும்... விஜய் சேதுபதி இவ்வளவு பேசுவாரா என்பது திரையுலகை சேர்ந்தவர்களுக்கே கொஞ்சம் ஆச்சர்யம் தான். பிக்பாஸ் நிகழ்ச்சி, அசத்தலாக துவங்கி இருந்தாலும் யாரும் எதிர்பாராத விதமாக நிகழ்ச்சி துவங்கிய 24 மணிநேரத்திலேயே முதல் போட்டியாளராக சாச்சனா வெளியேற்றப்பட்டார். இவரை தொடர்ந்து முதல் வார நாமினேஷனில், ரஞ்சித், அருண் பிரசாத், சௌந்தர்யா, ரவீந்தர் சந்திரசேகர் உள்ளிட்ட 6 பிரபலங்கள் சிக்கியுள்ள நிலையில் இவர்களில் யார் வெளியேறுவார் என பிக்பாஸ் போட்டியாளர்களிடம் கேட்க அவர்கள் தங்களின் கணிப்பை தெரிவித்துள்ளனர். 

Ravinder Chandrasekar and Soundariya Nanjundan

இதில் பெரும்பாலான போட்டியாளர்கள், ரஞ்சித், சௌந்தர்யா மற்றும் ரவீந்தர் பெயரை தான் முன்மொழிந்துள்ளனர். எனவே இவர்களின் கணிப்பு படி முதல் வாரத்தில்... இரண்டாவது போட்டியாளராக இவர்கள் மூவரில் ஒருவர் வெளியேறுவாரா? இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மரண படுக்கையில் இருந்த தங்கை.! கண்ணீருடன் கண்ணதாசன் எழுதிய சூப்பர் ஹிட் பாடல்!

Latest Videos

click me!