கோடிகளில் சம்பாதிக்கும் பிரபலங்கள்; பிக்பாஸில் அதிக சம்பளம் யாருக்கு?

First Published | Oct 10, 2024, 10:11 AM IST

இந்திய அளவில் மிகவும் பாப்புலரான ரியாலிட்டி ஷோவாக திகழ்ந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வழங்கப்படும் சம்பள விவரம் பற்றி பார்க்கலாம்.

Bigg Boss Hosts Salary

பிக்பாஸ் நிகழ்ச்சி முதன்முதலில் இந்தியாவில் இந்தியில் தான் நடத்தப்பட்டது. அங்கு இதுவரை 17 சீசன்கள் நடந்து முடிந்துள்ள அதனை சல்மான் கான் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். இதையடுத்து தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றிலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் ஆண்டு தோறும் தென்னிந்திய மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் நடிகர்களின் சம்பள விவரம் பற்றி பார்க்கலாம்.

Salman Khan Salary for Bigg Boss

சல்மான் கான்

இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சி 17 சீசன்கள் முடிவடைந்து 18வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியை சல்மான் கான் தான் முதல் சீசனில் இருந்து தொகுத்து வழங்கி வருகிறார். அவருக்கு ஒரு மாதத்திற்கு ரூ.60 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறதாம். மொத்தமாக அவர் 200 கோடி வரை சம்பளம் வாங்கக்கூடும் என கூறப்படுகிறது.

Tap to resize

Kamal Haasan Salary for Bigg Boss

கமல்ஹாசன்

சல்மான் கானை தொடர்ந்து அதிக சம்பளம் வாங்கிய பிக்பாஸ் ஹோஸ்ட் என்றால் அது உலகநாயகன் கமல்ஹாசன் தான். இவர் தமிழில் 7 சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இவர் கடைசியாக தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனுக்காக அவருக்கு ரூ.130 கோடி சம்பளமாக வழங்கப்பட்டதாம்.

Vijay Sethupathi Salary for Bigg Boss

விஜய் சேதுபதி

கமல்ஹாசன் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகியதால், அவருக்கு பதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி புது தொகுப்பாளராக களமிறங்கி உள்ளார். இவர் தான் இனி தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். இவருக்கு அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரூ.60 கோடி சம்பளமாக வழங்கப்பட உள்ளதாம்.

இதையும் படியுங்கள்... மிரட்டிய ரவீந்தரை எகிறி அடிக்க பாய்ந்த ரஞ்சித் - பிக்பாஸ் தமிழ் சீசன் 8-ல் வெடித்த மோதல்

Nagarjuna Salary for Bigg Boss

நாகார்ஜுனா

தெலுங்கு மொழியில் பிக்பாஸ் நிகழ்ச்சி 7 சீசன்கள் முடிவடைந்து தற்போது 8-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை முதல் சீசனில் இருந்தே நாகார்ஜுனா தான் தொகுத்து வழங்கி வருகிறார். அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக ரூ.30 கோடி சம்பளமாக வாங்கி வருகிறாராம்.

Kichcha Sudeep Salary for Bigg Boss

கிச்சா சுதீப்

கன்னடத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அங்கு இதுவரை 10 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில் தற்போது 11-வது சீசன் நடைபெற்று வருகிறது. கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் கிச்சா சுதீப்புக்கு ரூ.20 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறதாம்.

Mohanlal Salary for Bigg Boss

மோகன்லால்

பிக்பாஸ் நிகழ்ச்சியை மலையாளத்தில் தொகுத்து வழங்கி வருகிறார் நடிகர் மோகன்லால். இதுவரை மலையாளத்தில் 6 சீசன்கள் முடிவடைந்து உள்ளன. இதற்காக நடிகர் மோகன்லாலுக்கு ரூ.12 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறதாம்.

இதையும் படியுங்கள்... சாச்சனா விஷயத்தில் பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடும் பிக்பாஸ்!!

Latest Videos

click me!