
சினிமாவைப் பொறுத்த வரையில் படங்களின் வெற்றி, தோல்விகளை பொறுத்து நடிகர், நடிகைகள் தங்களது சம்பள விகிதங்களை நிர்ணயித்துக் கொள்கின்றனர். நடிகைகளை பொறுத்த வரையில் கதைக்கு முக்கியத்தும் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா மட்டுமே தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார். அவர் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார், மற்ற நடிகைகள் எவ்வளவு சம்பளம் வாங்கிறார்கள் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம் வாங்க….
நயன் தார முதல் த்ரிஷா வரையில் அதிக சம்பளம் வாங்கும் தெலுங்கு நடிகைகள் யார் யார் என்று பார்க்கலாம்….
நயன்தாரா
லேடி சூப்பர் ஸ்டார் என்று செல்லமாக அழைக்கப்படும் நயன்தாரா தெலுங்கு சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக அறியப்படுகிறார். ஒரு படத்திற்கு மட்டும் ரூ.13 முதல் ரூ.15 கோடி வரையில் சம்பளம் வாங்குகிறார். மலையாளத்தில் திரைக்கு வந்த மனசினக்கரேயில் என்ற படத்தின் மூலமாக சினிமா வாழ்க்கையை தொடங்கினார். ஐயா படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்த நயன்தாரா இன்று லேடி சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்படுகிறார்.
தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். நயன்தாராவின் அடுத்த ஹிட் அவரது மார்க்கெட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
அனுஷ்கா ஷெட்டி:
அனுஷ்கா என்றாலே பாகுபலி என்று சொல்லும் அளவிற்கு தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி தெலுங்கு சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் தன்னை உயர்த்திக் கொண்டார். ஒரு படத்திற்கு ரூ.4 கோடி முதல் ரூ.7 கோடி வரையில் சம்பளம் வாங்குகிறார். சூப்பர் படத்தின் மூலமாக தெலுங்கு சினிமாவில் நடிகயாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தார். வலிமையான கதாபாத்திரம் முதல் யதார்த்தமான ரோல் வரையில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் கடைசியாக மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி படம் வெளியானது. தற்போது காதி என்ற தெலுங்கு படத்திலும், கத்தனார் - தி வைல்ட் சோர்சரர் என்ற மலையாளப் படத்திலும் நடித்து வருகிறார்.
பூஜா ஹெக்டே:
தெலுங்கு மற்றும் பாலிவுட்டில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள பூஜா ஹெக்டே ஒரு படத்திற்கு ரூ.5 கோடி வரையில் சம்பளம் வாங்குகிறார். அரவிந்த சமேத வீர ராகவ ரங்கஸ்தலம் மற்றும் F3: Fun and Frustration ஆகிய சூப்பர் ஹிட் தெலுங்கு படங்களில் அவர் நடித்துள்ளார். தற்போது தமிழ் சினிமாவில் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ரூ.6.5 கோடி வரையில் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
த்ரிஷா:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த த்ரிஷா நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தெலுங்கு சினிமாவில் ஒரு படத்திற்கு ரூ.4 கோடி முதல் ரூ.6 கோடி வரையில் சம்பளம் வாங்குகிறார்.
வர்ஷம் நுவ்வொஸ்தானந்தே நேனோடந்தனா அத்தாடு, நீ மனசு எனக்கு தெலுசு ஆகிய படங்களில் தனி முத்திரை பதித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். அண்மையில் கோட் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அதற்கு முன் லியோ படத்திலும் நடித்திருந்தார்.
ராஷ்மிகா மந்தனா:
நேஷனல் க்ரஷ் என்று அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா ஒரு படத்திற்கு ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி சம்பளம் வாங்குகிறார். கீதா கோவிந்தம் சரிலேரு நீக்கேவரு மற்றும் புஷ்பா: தி ரைஸ் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ராஷ்மிகா முன்னணி நடிகையாக வலம் வந்தார். இன்று தெலுங்கு சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக தன்னை மாற்றியுள்ளார். புஷ்பா, வாரிசு ஆகிய படங்கள் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி அமோக வரவேற்பு பெற்றுள்ளன.
சமந்தா:
2010 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் கால் பதித்தது முதல் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஒரு படத்திற்கு ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடி வரையில் சம்பளம் பெறுகிறார். ஏ மாய சேசவே ஈகா சூப்பர் டீலக்ஸ் மற்றும் யு-டர்ன் போன்ற படங்களில் சமந்தா தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் பாலிவுட்டிலும், வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். கடைசியாக சமந்தா நடிப்பில் குஷி படம் வெளியானது. உடல்நலக் குறைவால் நடிப்பில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்ட சமந்தா, தெலுங்கு சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகத் திகழ்கிறார்.
காஜல் அகர்வால்:
ஒரு படத்திற்கு ரூ.2 கோடி சம்பளம் வாங்கும் காஜல் அகர்வால் அதிக சம்பளம் வாங்கும் தெலுங்கு நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். காஜல் அகர்வால் நடிப்பில் வந்த மகதீரா, டார்லிங் மற்றும் துப்பாக்கி ஆகிய படங்கள் இன்றும் நினைவில் நிற்கும் படங்களாக அமைந்துள்ளன.
சிங்கப்பூரில் உள்ள மடாமே துசாட்ஸில் தனது மெழுகுசிலையை காஜல் அகர்வால் திறந்து வைத்தார். எந்த நடிகைக்கும் சிலை வைக்கப்படாத நிலையில் முதல் முறையாக காஜல் அகர்வாலுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் அம்மாவான காஜல் அகர்வால் உற்சாகமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.