அரசியல் பிரபலமாக மாறியுள்ளம், தளபதி விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம், 5-ந் தேதி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் 'கோட்'. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இந்த படத்தை, ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி சுமார் 400 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருந்தார். இந்த படத்திற்காக தளபதி விஜய்க்கு மட்டுமே 200 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டது. மேலும் இந்த படத்தை... ஒரு மல்டி ஸ்டார் படம் போல் இயக்கி ரசிகர்களை அசர வைத்தார் வெங்கட் பிரபு.
24
Goat Movie Budget and Cast
தளபதி விஜய்யுடன் சேர்ந்து இந்த படத்தில், பிரபு தேவா, பிரஷாந்த், அஜ்மல், மைக் மோகன், உள்ளிட்ட பல பிரபலங்கள் வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இரட்டை வேடத்தில் நடித்திருந்த நடிகர் விஜய்க்கு ஜோடியாக சினேகா மற்றும் மீனாட்சி சவுத்திரி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் தளபதி ஹீரோவாக மட்டும் இன்றி... வில்லனாகவும் ரசிகர்கள் கண்களுக்கு விஷ்வல் ட்ரீட் வைத்தார்.
அதே போல் சிவகார்த்திகேயன் என்ட்ரி, விஜயகாந்த் AI தொழில்நுட்ப காட்சி, தோனி அப்பியேரன்ஸ் போன்றவை வேற லெவலில் இருந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் வெளியான இப்படமும் முதல் நாளிலேயே 100 கோடி வசூல் சாதனையை சாத்தியமாக்கியது. ஒரே வாரத்தில் 300 கோடிக்கும் மேல் வசூலை அள்ளிய 'கோட்' திரைப்படம் 25 நாட்களை கடந்தும் தமிழகத்தில் பல திரையரங்குகளில் ஓடியது.
44
Goat Life time collection
மேலும் தற்போது நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி... ட்ரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ரெகார்ட் பிரேக்கிங் என கூறி 'கோட்' படத்தின் லைப் டைம் பாக்ஸ் ஆபீஸ் வசூலை தற்போது அறிவித்துள்ளார். அதன்படி 'கோட்' திரைப்படம் இதுவரை ரூபாய் 455 கோடி வசூலித்துள்ளது. அதே சமயம் ரூபாய் 500 கோடியை எட்டாமல் போனது ரசிகர்களுக்கு சிறு வருத்தம் என கூறலாம்.