Published : Oct 09, 2024, 06:22 PM ISTUpdated : Oct 09, 2024, 08:53 PM IST
இசைஞானி இளையராஜா, ஒரே டியூனை பல மொழிகளில் உருவான 6 பாடல்களுக்கு போட்டு, அந்த 6 பாடல்களுமே ஹிட் ஆக்கியுள்ளார். அந்த பாடல்கள் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
திரையுலகில் இசையமைப்பாளர்கள் மத்தியில் ஹெவி காம்பெடிஷன் இருந்தாலும், ராஜாவின் இசைக்கு என எப்போதுமே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. சமீப காலமாக வெளியாகும் பல பாடல்களை, ஒரு முறை கேட்டாலே அது ரசிகர்களுக்கு அலுத்து போய்விடுகிறது. ஆனால் இசைஞானி இளையராஜா ஒரே பாட்டின் டியூனை 6 முறை பயன்படுத்தி அந்த 6 பாடல்களையும் ரசிக்க வைத்தவர் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அது தான் உண்மை. இளையராஜாவின் ஒரே டியூனில் வெளியான அந்த 6 பாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
27
Olangal Movie Song
கிட்டதட்ட 40 வருடங்களுக்கு முன்பு, அதாவது 1982 ஆம் ஆண்டு பாலுமகேந்திரா மலையாளத்தில் இயக்கிய 'ஓலங்கள்' திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்த டியூனை தான் தொடருந்து 5 பாடல்களுக்கு பயன்படுத்தியுள்ளார். இந்த படத்தில் மொத்தம் 3 பாடல்கள் இடம்பெற்ற நிலையில், இதில் அம்மாவுக்கும் குழந்தைக்கும் இடையே உள்ள பாசத்தை விவரிக்கும் விதமாக, இசையாராஜா இசையமைத்த பாடல் 'தும்பி வா தும்புக்குடத்தின்' என துவங்கும் பாடல். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் அடித்தது.
இதை தொடர்ந்து அதே வருடம் (1982) தமிழில் இயக்குனர் கே.விஜயன் இயக்கத்தில் விஜயகாந்த் ஹீரோவாக நடித்து, காயத்ரி ஹீரோயினாக நடித்து வெளியான திரைப்படம் 'ஆட்டோ ராஜா'. இந்த படத்தில் காதலனும் காதலியும் டூயட் பாடும் பாடலுக்கு, இதே டியூனை பயன்படுத்தி, 'சங்கத்தில் பாடாத கவிதை... தங்கத்தில் யார் தந்தது' என்கிற ஹிட் பாடலை கொடுத்து ரசிக்க வைத்தார்.
47
Nereekshana
இதைத்தொடர்ந்து 1986 ஆம் ஆண்டு தெலுங்கில், இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கத்தில்.. பானு சந்தர் ஹீரோவாகவும், அர்ச்சனா ஹீரோயினாகவும் நடித்து வெளியான திரைப்படம் Nireekshana. இந்த படத்தில் காதலி தன்னுடைய காதலனை நினைத்து பாடும் பாடலாக இடம்பெற்ற, ஆகாசம் ஈனதிதோ என துவங்கும் பாடலுக்கு அதே டியூனை போட்டிருப்பார் இளையராஜா.
இந்த படத்தின் தமிழ் வெர்ஷனாக வெளியான 'கண்ணே கலைமானே' படத்தில் ஜானகி குரலினிலே.. அதே பாடல் தமிழில் சேம் டியூனில் வெளியானது. இந்த பாடலும் ரசிகர்கள் மத்திய நல்ல வரவேற்பை பெற்றது.
67
Aur Ek Prem Kahani
பின்னர் 1996 ஆம் ஆண்டு ஹிந்தியில், பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளியான Aur Ek Prem Kahani திரைப்படத்தில் காலேஜ் டூர் போகும் சுச்சுவேஷனுக்கு ஏற்ற போல், அதே டியூனை கொஞ்சம் பட்டி டிங்கரிங் செய்து ஃபன்னாக கம்போஸ் செய்திருப்பார் இளையராஜா.
கடைசியாக 2009 ஆம் ஹிந்தியில் வெளியான 'பா' என்கிற திரைப்படத்தில், அப்பா - மகன் ரிலேஷன்ஷிப்பை கூறும் விதமாக இடம்பெறும் ஒரு Gumm Summ Gumm என துவங்கும் பாடலுக்கும் இதே டியூனை போட்டு ஹிட் கொடுத்திருப்பார் இளையராஜா. இப்படி ஒரே ட்யூனை வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு சூழ்நிலைக்கு ஏற்ற போல் நேர்த்தியாக கையாண்டு அந்த ஆறு பாடல்களையும் சூப்பர் ஹிட் ஆக்கிய மேஜிக் இளையராஜாவுக்கே உரியதாகும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.