பிரபல நடிகர் ஜெயராம், தன்னுடைய மகன் காளிதாஸ் திருமணத்திற்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை குடும்பத்துடன் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும், மிகவும் பிரபலமாக அறியப்படுபவர் ஜெயராம். இவரது மகன் காளிதாஸ் சமீப காலமாக தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தை பிடிக்க போராடி வருகிறார். இவருக்கும் பிரபல மாடல் அழகி தாரிணிக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், திருமண நிச்சயதார்த்தம் பிரமாண்டமாக நடந்து முடிந்த நிலையில், இதில் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு இவரை வாழ்த்தினர்.
25
Jayaram Invite Marriage
இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு தன்னுடைய மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தி வைத்த ஜெயராம், தற்போது தன்னுடைய மகன் திருமண வேலைகளில் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். காளிதாஸ் - தாரிணி நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு நவம்பர் மதம் நடந்து முடிந்த நிலையில், விரைவில் காளிதாஸ் ஜெயராமுக்கு திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தது வருகிறார்.
அந்த வகையில் தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலினை, ஜெயராம் தன்னுடைய மனைவி மற்றும் மகன் காளிதாசுடன் சென்று திருமணத்திற்கு அழைப்பு விடுக்கும் வகையில் பத்திரிக்கை கொடுத்துள்ளார். இது குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வருகிறது. காளிதாஸ் மற்றும் தாரணி திருமண தேதி குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகாத நிலையில், அடுத்த மாதம் இவர்களின் திருமணம் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
45
Kalidas Jayaram Tarini Kalingarayar Engagement
காளிதாஸ் ஜெயராம் தன்னுடைய 7 வயதிலேயே மலையாளத் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 'கொச்சு கொச்சு' என்கிற முதல் படத்திற்கே... சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பெற்றார். இதைத்தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு தமிழில் 'மீன் குழம்பும் மண் பானையும்' என்கிற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க போராடி வந்த காளிதாசுக்கு... மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது 'நவராசா' என்கிற அந்தாலஜி தொடர் தான்.
இதில் பாவக்கதைகள் என்கிற தொடரில், திருநங்கை வேடத்தில் காளிதாஸ் நடித்திருந்தார். சுதா கொங்கரா இயக்கி இருந்த இந்த தொடர் விமர்சன ரீதியாக அதிகம் பாராட்டப்பட்டது. மேலும் சமீபத்தில் தனுஷின் 50-வது திரைப்படமாக வெளியான ராயன் படத்திலும் தனுஷுக்கு தம்பியாக நடித்திருந்தார் காளிதாஸ்.
காளிதாஸ் ஜெயராம் திருமணம் செய்து கொள்ள தாரணி 2019 ஆம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு பட்டத்தை பெற்றவர். மேலும் 2021 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டார். சில விளம்பர படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இந்நிலையில் காளிதாஸ் - தாரிணி இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து தற்போது திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.