தியேட்டரில் பிளாப் ஆகி; பிற்காலத்தில் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்ட கமல் படங்கள் ஒரு பார்வை

First Published Oct 9, 2024, 3:27 PM IST

தியேட்டரில் ரிலீஸ் ஆன போது தோல்வியடைந்து தற்போது ரசிகர்களால் கொண்டாடப்படும் கமல்ஹாசனின் மாஸ்டர் பீஸ் படங்கள் பற்றி பார்க்கலாம்.

Kamalhaasan Flop Movies

கோலிவுட்டில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பதில் கில்லாடி என்றால் அது கமல்ஹாசன் தான். அப்படி அவர் வித்தியாசமாக நடித்து வெளிவந்த படங்கள் ரிலீஸ் ஆன சமயத்தில் பிளாப் ஆகி இருந்தாலும் தற்போது ரசிகர்களால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்படுகின்றன. அது என்னென்ன படங்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Pesum Padam, Guna

பேசும் படம்

சிங்கீதம் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் கமல்ஹாசன், அமலா நடிப்பில் வெளியான படம் பேசும்படம். இப்படத்திற்கு வைத்தியநாதன் இசையமைத்து இருந்தார். இப்படம் வெளிவந்த சமயத்தில் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றாலும் ரசிகர்களோடு கனெக்ட் ஆகாததால் திரையரங்குகளில் தோல்வியை தழுவியது.

குணா

சந்தான பாரதி இயக்கத்தில் கமல் நடித்த படம் குணா. இப்படத்தில் இளையராஜாவின் இசை மற்றும் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன. இருப்பினும் ரிலீஸ் ஆன சமயத்தில் இப்படம் தோல்வி அடைந்தது. இப்படம் பிளாப் ஆனதற்கு மற்றொரு காரணம் இது ரஜினியின் தளபதி படத்தோடு ரிலீஸ் ஆனது. அன்று கொண்டாடப்படாத குணா படம் இப்போது தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்படுகிறது.

Latest Videos


Kuruthipunal, Heyram

குருதிப்புனல்

1995-ம் ஆண்டு வெளிவந்த கமல்ஹாசனின் குருதிப்புனல் திரைப்படம் அந்த காலத்திலேயே ஹாலிவுட் ஸ்டைலில் எடுக்கப்பட்ட படமாகும். பாடல் இல்லாத படமாக வெளிவந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை சந்தித்தது. இப்படத்தின் தோல்விக்கு இது ரஜினியின் முத்து படத்துடன் ரிலீஸ் ஆனதும் ஒரு காரணம்.

ஹேராம்

கமல்ஹாசன் இயக்கி தயாரித்து கடந்த 2000-ம் ஆண்டு வெளிவந்த படம் ஹேராம். மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது மட்டுமின்றி ஆஸ்கார் நாமினேஷன்க்காக இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் வசூல் ரீதியாக இதுவும் ஒரு தோல்வி படம் தான்.

இதையும் படியுங்கள்... இதெல்லாம் கமல் லேடி வாய்ஸில் பாடிய பாடல்களா! இவ்ளோ நாள் இதுதெரியாம போச்சே!!

Aalavandhan

ஆளவந்தான்

கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். சைக்கோவாக நடித்திருந்த கமல்ஹாசனின் அபார நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. இருப்பினும் இடையிடையே வரும் கிராபிக்ஸ் காட்சிகளால் ரசிகர்கள் புரியாமல் வெறுப்படைந்தனர். 2001ம் ஆண்டு தீபாவளிக்கு நந்தா, ஷாஜகான் போன்ற படங்களுக்கு போட்டியாக அதிக திரையரங்குகளில் வெளியான ஆளவந்தான் படு தோல்வி அடைந்தது. பின்னாளில் ஹாலிவுட்டில் சக்கைப்போடு போட்ட கில் பில் பட காட்சி ஆளவந்தானை பார்த்து இன்ஸ்பியர் ஆகி எடுத்திருந்தார் டரான்டினோ.

Anbe Sivam

அன்பே சிவம்

இந்தப்படம் எப்படி பிளாப் ஆனது என பலரும் ஷாக் ஆகும் ஒரு படம் தான் அன்பே சிவம். சுந்தர் சி இயக்கத்தில் 2003-ம் ஆண்டு இப்படம் ரிலீஸ் ஆனது. வெளியான சமயத்தில் இப்படத்தை மக்கள் பெரியதாக கண்டுகொள்ளவில்லை. இதோடு போட்டியாக வந்த விக்ரமின் தூள் படம் வசூலில் தூள் கிளப்பியதால் அன்பே சிவம் பிளாப் ஆனது. ஆனால் இன்று இப்படத்தை பார்த்து சிலாகித்து பேசாத ஆளே இருக்க முடியாது. அப்படி ஒரு மாஸ்டர் பீஸ் படமாக அன்பே சிவம் உள்ளது.

இதையும் படியுங்கள்... 5 முறை வாலியின் வரிகளுக்கு NO சொன்ன கமல் - 6வது முறை கடுப்பில் எழுதி மெகா ஹிட்டான பாடல் எது தெரியுமா?

click me!