எம்ஜிஆரின் ஒட்டுமொத்த பாடலுக்கும் கத்தரி போட்ட சென்சார் – மாற்றி எழுதி மாஸ் ஹிட் கொடுத்த வாலி!

Published : Oct 09, 2024, 04:05 PM ISTUpdated : Oct 09, 2024, 11:07 PM IST

Censor Banned Vaali Song for MGR Enga Veettu Pillai Movie: எங்க வீட்டு பிள்ளை படத்தில் இடம்பெற்ற வாலி எழுதிய 'நான் ஆணையிட்டால்' பாடலுக்கு சென்சார் அதிகாரிகள் தடை விதித்து அந்த பாடல் வரிகளை மாற்ற வேண்டும் என்று கூறினர். வாலி என்ன செய்தார்? பாடல் வரிகள் மாற்றப்பட்டதா? என்று பார்க்கலாம்.

PREV
15
எம்ஜிஆரின் ஒட்டுமொத்த பாடலுக்கும் கத்தரி போட்ட சென்சார் – மாற்றி எழுதி மாஸ் ஹிட் கொடுத்த வாலி!
Lyricist Vaali and MGR

MGR vs Vaali: வாலி எழுதிய பாட்டுக்கு டான்ஸ் ஆடாத நடிகர்களே இருக்க முடியாது. கவிஞர் கண்ணதாசனுக்கு பிறகு எம்ஜிஆருக்கு மட்டுமின்றி சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அஜித் என்று எல்லா நடிகர்களுக்குமே வாலி பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்து ஹிட் கொடுத்திருக்கிறார்.

அப்படிப்பட்ட வாலி எழுதிய பாடல் ஒன்றிற்கு சென்சார் அதிகாரிகள் முட்டுக்கட்டை போட்டுள்ளனர். உடனடியாக அந்த பாடல் வரிகளை எல்லாம் மாற்ற வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதன் பிறகு வாலி என்ன செய்தார்? பாடல் வரிகளை மாற்றினாரா? படம் ஹிட் கொடுத்ததா? யாருடைய படம் என்பது குறித்து முழுமையாக பார்க்கலாம் வாங்க…

25
Enga Veettu Pillai Movie Songs

எம்ஜிஆரின் ஆஸ்தான கவிஞர்களில் வாலியும் ஒருவர். கடந்த 1964 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் வெளியாகி ஹிட் கொடுத்த படம் ராமுடு பீமுடு. இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய ஆசைப்பட்டிருக்கிறார் தயாரிப்பாளர் நாகி ரெட்டி. இதற்காக எங்க வீட்டு பிள்ளை படத்தை தொடங்கியிருக்கிறார். அவருடன் இணைந்து சக்கரபாணியும் இந்த படத்தை தயார்த்திருக்கிறார். இந்தப் படத்தில் எம்ஜிஆர் இரு வேறு கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருப்பார்.

மேலும், சரோஜா தேவி, எஸ்வி ரங்கா ராவ், எம்.என்.நம்பியார், கே.ஏ.தங்கவேலு, நாகேஷ் ஆகியோர் உள்பட பலர் நடித்திருந்தனர். 1965 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்த படத்திற்கு நான் ஆணையிட்டால், குமரி பெண்ணின் உள்ளத்தில், பென் போனால், நான் மாந்தோப்பில் என்று 4 பாடல்களுக்கு பாடல் வரிகள் அமைத்து கொடுத்திருப்பார். கண்களும் காவடி என்ற பாடலுக்கு ஆலங்குடி சோமு பாடல் வரிகள் அமைத்திருக்கிறார். இந்தப் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் மத்தியில் நீங்காத இடம் பெற்றன.

35
MGR Enga Veettu Pillai Movies

ராமு மற்றும் லட்சுமணன் அல்லது இளங்கோ என்று 2 வேடங்களில் அதாவது ஒருவர் கோழையாகவும், ஒருவர் வீரனாகவும் எம்ஜிஆர் நடித்திருந்தார். அதன் பிறகு கோழை வீட்டில் வீரனும், வீரன் வீட்டின் கோழையும் மாறிவிடுகிறார்கள். கோழை வீட்டில் இருக்கும் வீரன் நம்பியாரை சாட்டை கொண்டு அடித்து விடுகிறார். அப்போது தான் நான் ஆணையிட்டால் என்ற பாடல் வரும்.

இந்தப் பாடலை வாலி முதலில் நான் அரசன் என்றால் என் ஆட்சி என்றால் இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார் என்று எழுதியிருக்கிறார். படம் சென்சாருக்கு செல்லவே இந்த பாடல் வரிகள் வரக் கூடாது இதனை மாற்றுங்கள் என்று சென்சார் அதிகாரிகள் தயாரிப்பாளரிடம் கூறியிருக்கின்றனர். தயாரிப்பாளர் நாகி ரெட்டியோ வாலியிடம் கூறவே, நான் எம்ஜிஆர் சொல்லாமல் எதையும் மாற்ற மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்திருக்கிறார்.

45
Lyricist Vaali and MGR

அப்புறம் என்ன, எதை மாற்ற வேண்டுமோ அதை மாற்றுங்கள் என்று எம்ஜிஆர் வாலிக்கு உத்தரவிட என்னென்ன மாற்ற வேண்டுமோ எல்லா மாற்றத்தையும் உடனே செய்திருக்கிறார் வாலி. நான் அரசன் என்றால் என் ஆட்சி என்றால் என்ற பாடல் வரிகளுக்கு நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனை பட மாட்டார் என்று மாற்றியிருக்கிறார்.

இதே போன்று தான், எதிர் காலம் வரும் என் கடமை வரும் இந்த காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன் என்று வரிகள் அமைத்திருந்தார். ஆனால், அன்றைய காலகட்டத்தில் திமுகவைச் சேர்ந்தவர்கள், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களை காக்கைகள் என்று விமர்சித்து பெரும் சர்ச்சையாகியிருந்தது. இதன் காரணமாக அந்த வரிகளையும் எதிர் காலம் வரும் என் கடமை வரும் இந்த கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன் என்று மாற்றியிருக்கிறார்.

55
Enga Veettu Pillai - MGR and Vaali

சென்சாருக்கு சென்ற பிறகு வாலி எழுதிய பாடல் வர்களில் கிட்டத்தட்ட 75 சதவிகிதம் மாற்றம் செய்யப்பட்டதால், இந்த பாடல்கள் எல்லாம் ஹிட் கொடுக்காது என்று பலரும் எண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால், அவர் வரிகளை தான் மாற்றினாரே தவிர அதிலுள்ள அர்த்தத்தை மாற்றவில்லை. வரிகள் மாற்றப்பட்டாலும் பாடல் ஒரே அர்த்தத்தை கொடுத்திருக்கிறது.

பாடல் வரிகள் மாற்றம் செய்யப்பட்டிருந்தாலும் வாலி சொல்ல வந்ததை கச்சிதமாக சொல்லியிருக்கிறார். எம்ஜிஆரும் பெருமையாக கொண்டாடியிருக்கிறார். இன்றும் இந்தப் பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிருப்பதை கேட்க முடிகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories