
சூர்யா - ஜோதிகா, சினேகா - பிரசன்னா என சினிமாவில் ஜோடியாக நடித்து பின்னர் காதல் திருமணம் செய்துகொண்ட நடிகர், நடிகைகளை போல் சின்னத்திரையிலும் காதல் ஜோடிகள் அதிகரித்த வண்ணம் உள்ளனர். முதலில் ரீல் ஜோடிகளாக நடித்து பின்னர் ரியல் ஜோடிகள் ஆனவர்கள் சின்னத்திரையில் ஏராளம் உள்ளன. அந்த லிஸ்ட்டில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
செந்தில் - ஸ்ரீஜா
சரவணன் மீனாட்சி என்கிற சீரியலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. அதன் முதல் சீசனில் ஜோடியாக நடித்திருந்தவர்கள் தான் மிர்ச்சி செந்தில் மற்றும் ஸ்ரீஜா. அந்த சீரியல் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனதற்கு இவர்கள் இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரியும் முக்கிய காரணம். சீரியலில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதை போல் ரியல் லைஃபிலும் இவர்களுக்கு இடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதால் இருவரும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.
ஆல்யா மானசா - சஞ்சீவ்
ராஜா ராணி என்கிற விஜய் டிவி சீரியலில் ஜோடியாக நடித்ததன் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனவர்கள் தான் ஆல்யா மானசா - சஞ்சீவ் ஜோடி. இவர்கள் இருவரும் சீரியலில் நடிக்கும்போதே காதலிக்க தொடங்கினர். பின்னர் சீரியல் முடிந்த கையோடு இருவரும் திருமணமும் செய்துகொண்டனர். தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்கு பின்னரும் இருவரும் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகின்றனர்.
சித்து - ஸ்ரேயா
சித்து மற்றும் ஸ்ரேயா அஞ்சன் ஜோடியும் சீரியலில் ஜோடியாக நடித்து காதலித்து பின்னர் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் இருவரும் திருமணம் என்கிற சீரியலில் ஜோடியாக நடித்திருந்தனர். அந்த சீரியல் முடிந்ததும் இவர்களது திருமணமும் நடந்து முடிந்தது. தற்போது வள்ளியின் வேலன் என்கிற சீரியலில் சித்து - ஸ்ரேயா இருவரும் ஜோடியாக நடித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... சீரியலில் அண்ணன்; நிஜத்தில் காதலி! விஜய் டிவி ஹீரோயினுடன் நிச்சயதார்த்தத்தை அறிவித்த வெற்றி வசந்த்!
சையத் அன்வர் - சமீரா
விஜய் டிவியில் சக்கைப்போடு போட்ட சீரியல்களில் ஒன்று பகல் நிலவு. இந்த சீரியலில் ஜோடியாக நடித்த சையத் அன்வர் - சமீரா இருவரும் பின்னர் காதலித்து திருமணமும் செய்துகொண்டனர். இந்த ஜோடிக்கு குழந்தையும் உள்ளது.
கிருஷ்ணா - சாயா சிங்
சன் டிவியில் ஒளிபரப்பான ரன் என்கிற சீரியலில் ஜோடியாக நடித்த கிருஷ்ணா மற்றும் சாயா சிங் இடையே காதல் மலர்ந்தது. அந்த சீரியல் பிளாப் ஆனாலும் இவர்களின் காதல் சக்சஸ் ஆனது. இவர்கள் இருவரும் தற்போது திருமணம் செய்துகொண்டு ஜாலியாக வாழ்ந்து வருகின்றனர்.
மதன் - ரேஷ்மா
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி ஹிட்டான பூவே பூச்சூடவா என்கிற சீரியலில் நடித்தபோது மதன் மற்றும் ரேஷ்மாவிற்கு இடையே காதல் மலர்ந்தது. அந்த சீரியலில் இவர்கள் இருவரும் சுந்தர் - சக்தி ஆகிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அந்த சீரியல் முடிந்த பின்னர் மதனும் ரேஷ்மாவும் திருமணம் செய்துகொண்டனர்.
வெற்றி வஸந்த் - வைஷ்ணவி சுந்தர்
சின்னத்திரையில் தற்போது சக்கைப்போடு போட்டு வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வருபவர் வெற்றி வஸந்த். இவருக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி சீரியல் நடிகை வைஷ்ணவி சுந்தருக்கும் இடையே காதல் ஏற்பட்டு அவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... ரஜினிகாந்த், கமல், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களின் சாயலில் உள்ள சீரியல் ஹீரோஸ்!