கண்ணதாசன், வாலிக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவில் பெரிதும் கொண்டாடப்பட்ட பாடலாசிரியர் என்றால் அது வைரமுத்து தான். அவர் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் தொடங்கி ஜிவி பிரகாஷ் வரை பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றி இருக்கிறார். அதிலும் குறிப்பாக இளையாராஜா உடன் அவர் கூட்டணி அமைத்த பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டாகின. ஆனால் குறுகிய காலகட்டத்தில் இந்த கூட்டணி முறிவுக்கு வந்தது. அதன்பின்னர் 30 ஆண்டுகளுக்கு மேலாக இளையராஜா உடன் வைரமுத்து பணியாற்றவே இல்லை.
25
Lyricist vairamuthu
இளையராஜா உடன் கூட்டணி முறிந்தாலும் ஏ.ஆர்.ரகுமான் உடன் தொடர்ந்து பயணித்த வைரமுத்து அவரது இசையில் பல பாடல்களை எழுதி இருக்கிறார். அப்படி அவர் எழுதி சூப்பர் ஹிட் ஆன மூன்று பாடல்களில் ஒரே வரியை பயன்படுத்தி இருக்கிறார் வைரமுத்து. அதன்படி ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த டூயட் மற்றும் உயிரே பட பாடலிலும், பரத்வாஜ் இசையமைத்த ஜே ஜே பட பாடலிலும் ஒரே பாடல் வரியை பயன்படுத்தி இருக்கிறார்.
கடலில் மழைத்துளி விழுந்த பின்னர் அதில் எது மழைத்துளி என்பதை கண்டுபிடிக்கவே முடியாது என்கிற கவித்துவமான உவமையுடன் கூடிய பாடல் வரிகளை தான் மூன்று பாடல்களில் பயன்படுத்தி இருக்கிறார் வைரமுத்து. இதில் அந்த வரிகளை அவர் முதன்முதலில் எழுதியது டூயட் படத்திற்காக தான். அப்படத்தில் இடம்பெறும் அஞ்சலி அஞ்சலி என்கிற பாடலில் ‘கடலிலே மழை விழுந்த பின் எந்த துளி மழைத்துளி’ என எழுதி இருப்பார் வைரமுத்து.
45
Poongatrile from Uyire Movie
அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் ஷாருக்கான், மனிஷா கொய்ராலா நடித்து கடந்த 1998-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆன உயிரே படத்திலும் இதே வரியை பயன்படுத்தி இருப்பார் வைரமுத்து. அப்படத்திற்காக ரகுமான் இசையில் உன்னிமேனன் பாடி சூப்பர் ஹிட் ஆன பூங்காற்றிலே உன் சுவாசத்தை என்கிற பாடலில், ‘கடல் மேல் ஒரு துளி விழுந்ததே அதை தேடி தேடி பார்த்தேன்’ என எழுதி இருந்தார் கவிஞர் வைரமுத்து.
55
Unai Naan Song from Jay Jay
இறுதியாக மாதவன் நடிப்பில் கடந்த 2003-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி வெற்றிபெற்ற காதல் திரைப்படமான ஜே ஜே-விலும் இப்பாடல் வரி இடம்பெற்று இருக்கும். அப்படத்தில் பரத்வாஜ் இசையில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகின. அதில் ஒரு பாடல் தான், உனை நான் என்கிற ரொமாண்டிக் சாங். இப்பாடலில் தான் ‘மழைத்துளி எங்கே என்று கடல் காட்டுமா’ என பயன்படுத்தி இருப்பார் வைரமுத்து. இந்த மூன்று பாடல்களுமே எவர்கிரீன் ஹிட் பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.