மாறு வேடத்தில் வந்து ரஜினி ரசிகர்களுடன் வேட்டையன் படம் பார்த்த விஜய்.!

First Published | Oct 10, 2024, 1:46 PM IST

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி உள்ள வேட்டையன் திரைப்படத்தை நடிகர் விஜய் மாறுவேடத்தில் வந்து பார்த்திருப்பதாக தகவல் பரவி வருகிறது.

Vijay Watched Vettaiyan Movie

நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. த.செ.ஞானவேல் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக மலையாள திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டார் மஞ்சு வாரியர் நடித்துள்ளார். மேலும் பகத் பாசில், ராணா டகுபதி, அமிதாப் பச்சன், ரக்‌ஷன், துஷாரா விஜயன், ரித்திகா சிங் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே வேட்டையன் திரைப்படத்தில் நடித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். 

Vettaiyan

வேட்டையன் திரைப்படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக நடித்துள்ளார் ரஜினிகாந்த். இப்படத்தை லைகா நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து இருந்தது. இப்படம் இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ளது. வேட்டையன் படத்தின் முதல் காட்சி தமிழ்நாட்டில் இன்று காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது. இதையொட்டி தியேட்டர் முன் குவிந்த ரசிகர்கள் ஆடிப்பாடி, பட்டாசு வெடித்தும் தியேட்டர் முன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதையும் படியுங்கள்... Vettaiyan Review : ரஜினி வச்ச குறி தப்பியதா? தட்டி தூக்கியதா? வேட்டையன் படத்தின் விமர்சனம் இதோ

Tap to resize

vijay, rajinikanth

ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் வேட்டையன் படத்தை பார்க்க ஆர்வம் காட்டினர். அதன்படி நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான தனுஷ், இன்று காலை 9 மணிக்கு வேட்டையன் படத்தின் முதல் காட்சியை சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் கண்டுகளித்தார். அதேபோல் வேட்டையன் படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தும் தனுஷ் உடன் சேர்ந்து வேட்டையன் படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்த்து மகிழ்ந்தார்.

Thalapathy Vijay Watched Vettaiyan Movie in Devi Theatre

இதுமட்டுமின்றி தளபதி விஜய்யும் வேட்டையன் படத்தின் முதல் காட்சியை சென்னையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் பார்த்து ரசித்ததாக தகவல் பரவி வருகிறது. சென்னையில் உள்ள தேவி திரையரங்கில் ரஜினி ரசிகர்களுடன் நடிகர் விஜய் வேட்டையன் படத்தை கண்டுகளித்ததாக கூறப்படுகிறது. படம் முடிந்ததும் முகத்தை மூடிக்கொண்டு யாருக்கு தெரியாதபடி சீக்ரெட் வழியில் வந்து விஜய் காரில் ஏறி செல்லும்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் படியுங்கள்... ஆபீஸ மூடு; ஆட்டத்த போடு! வேட்டையன் படம் ரிலீஸாவதால் ஊழியர்களுக்கு லீவு விட்ட நிறுவனம்

Latest Videos

click me!