ரோஜா படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் ஒரு இசைப்புயலாக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான். முதல் படத்திலேயே தேசிய விருது வென்று அசத்திய ஏ.ஆர்.ரகுமான், அதன்பின்னர் தமிழில் ஷங்கர், மணிரத்னம், பாரதிராஜா போன்ற ஜாம்பவான்களுடன் பணியாற்றி தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார். இந்திய திரையுலகிலேயே அதிக தேசிய விருதுகள் வாங்கிய இசையமைப்பாளர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரராக இருக்கும் ஏ.ஆர்.ரகுமான் இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் வென்று அசத்தி உள்ளார்.