
டாப் 10 TRP பட்டியலில் இடம்பிடிக்க தொலைக்காட்சிகள் ஒவ்வொரு வாரமும் முட்டி மோதி வருகிறது. இந்நிலையில், இந்த வருடத்தின் 40 ஆவது வாரத்தில், டாப் 10 டிஆர்பி பட்டியலில் இடம்பிடித்த சீரியல்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கடந்த மூன்று வாரங்களாகவே கயல் - எழில் திருமணத்தை வைத்தே நகர்ந்து வரும் 'கயல்' சீரியல் தான் இந்த வாரம் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த வாரமே எழில் மற்றும் கயலின் திருமணம் நடந்து முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை திருமணம் நடக்கவில்லை. ஆனால் பல ரூபங்களில் இவர்களின் திருமணத்தை நிறுத்த பிரச்சனைகள் மட்டும் வந்து கொண்டே உள்ளது. இந்த சீரியல், 9.59 டிஆர்பி புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.
இதை தொடர்ந்து, சிங்க பெண்ணே சீரியலை பின்னால் தள்ளிவிட்டு... இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது மூன்று முடிச்சு தொடர். இந்த சீரியலிலும் தற்போது ஹீரோ சூர்யாவின் திருமண ஏற்பாடுகள் தான் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. எனினும் ஹீரோ எப்படி ஏழை வீட்டு பெண்ணான கதாநாயகி நந்தினியை திருமணம் செய்து கொள்வார்? என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த தொடர் 8. 35 டிஆர்பி புள்ளிகளை கைப்பற்றி உள்ளது.
முதல் இடத்தில் இருந்து... மெல்ல மெல்ல பின்னுக்கு வந்து, இந்த வாரம் மூன்றாவது இடத்தை கைப்பற்றியுள்ளது சிங்க பெண்ணே தொடர். தன்னுடைய தோழிக்காக உயிரை பணயம் வைத்து பல சாகச வேலைகளில் ஈடுபட்ட ஆனந்தி, சுவர் ஏரி குதிக்கும் போது வார்டன் கையில் சிக்கி உள்ளதால்... ஹாஸ்டலை விட்டு வெளியேற்றப்படுவாரா? என்கிற பரபரப்பான காட்சிகளுடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்த சீரியல், 8.26 TRP புள்ளிகளுடன், மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அதே சமயம் அன்பு மீதான காதலை ஆனந்தி வெளிப்படுத்துவாரா? அன்பு தான் அழகன் என்பதை அறிந்து கொள்வாரா? ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிய வருமா? என இந்த சீரியலை சுற்றி பல கேள்விகள் சுழன்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட் படத்தில் ஷாருக்கானுடன் நடிக்க No சொன்ன கமல்! காரணம் என்ன?
இதைத்தொடர்ந்து நான்காவது இடத்தில், மருமகள் சீரியல் உள்ளது. பிரபு - ஆதிரை திருமணத்தை நிறுத்த ஒரு கும்பல் காத்திருக்கும் நிலையில், இவர்களின் திருமணத்தை நடத்த ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது. குறிப்பாக பிரபுவின் காமெடியான நடிப்பும் ஆதிரையின் போல்டான நடிப்பும் இந்த சீரியலின் மிகப்பெரிய பலம் என கூறலாம். மருமகள் சீரியல், இந்த வாரம் 7.98 TRP புள்ளிகளுடன் நான்காவது இடத்தை கைப்பற்றி உள்ளது.
இந்த வாரம் 5-ஆவது இடத்தில் சுந்தரி சீரியல் உள்ளது. இறுதி கட்டத்தை நெருங்கி வரும் இந்த தொடரில், எப்படியும் தமிழ் பாப்பாவை தன்னுடன் அழைத்து சென்று விட வேண்டும் என கார்த்திக் நினைத்துக் கொண்டிருக்க, சுந்தரி மற்றும் விஜய்யின் காதல் ட்ராக் இன்னொரு புறம் சென்று கொண்டிருக்கிறது. விஜய்யின் அம்மா தற்போது சுந்தரி மீது கோவமாக இருக்கும் நிலையில், அவர் மனம் மாறி சுந்தரியை மருமகளாக ஏற்றுக் கொள்வாரா? என்கிற பல சுவாரஸ்யமான விஷயங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர் 7.85 டிஆர்பி புள்ளிகளை பெற்றுள்ளது.
விஜய் டிவியில் நம்பர் 1 TRP சீரியலான... சிறகடிக்க ஆசை தொடர் தற்போது டாப் 5 பட்டியலில் இருந்து வெளியேறி 6-ஆவது இடத்திற்கு சென்றுள்ளது. வழக்கமான குடும்பத்தை என்றாலும், பல சுவாரஸ்யமான காட்சிகள் இந்த சீரியலில் இடம்பெறுகின்றன. இந்த தொடரில் தற்போது நவராத்திரி கொண்டாட்டம் கொண்டாட்டம் ஒருபுறம் களைகட்டிக் கொண்டிருக்கும் நிலையில், இதுவரை சத்யா மீது கோபமாக இருந்த முத்து மனம் மாறி சத்யாவுக்காக கல்லூரிக்கு சென்று பேச முடிவு செய்துள்ளார். இந்த தொடர் 7. 76 புள்ளிகளை கைப்பற்றி உள்ளது.
இதற்கு அடுத்தபடியாக 7-வது இடத்தில், சன் டிவியில் மாலை நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் டப்பிங் ஆன்மீக தொடரான ராமாயணம்' 6.89 டிஆர்பி புள்ளிகளை கைப்பற்றியுள்ளது.
டபுள் கேம் ஆடிய வைரமுத்து; MSV-க்கு எழுதிய அதே பாடலை ஏ.ஆர்.ரகுமானுக்கும் கொடுத்து ஹிட் பண்ணிட்டார்!
இதை தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலை பின்னுக்கு தள்ளிவிட்டு, 8-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது பாண்டியன் ஸ்டோர் சீரியல். தங்கமயில் படிப்பு விஷயத்தில் சிக்குவாரா என்கிற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில்... அதில் எஸ்கேப் ஆகி இருந்தாலும், ஹோட்டல் விஷயத்தில் சரவணன் தன்னுடைய தம்பிக்காக உண்மையை உடைத்து மயில் மீது உள்ள தவறை போட்டுடைத்தார். இந்த வாரம் பாண்டியன் ஸ்டோர் சீரியல், 6 .74 பிஆர்பி புள்ளிகளை பெற்றுள்ளது.
அதே போல் சன் டிவியின் சீரியல்களில் ஒன்றான 'மல்லி' சீரியல் தான் இந்த வாரம் 9-வது இடத்தை பிடித்துள்ளது. அம்மாவின் பாசத்திற்காக ஏங்கும் குழந்தைக்கு, அம்மாவாக நடிக்க வரும் மல்லி... நிரந்தரமாக அம்மாவாக மாறுகிறார். இந்த தொடர் 6.58 டிஆர்பி புள்ளிகளை கைப்பற்றியுள்ளது.
இந்த வாரம் 10 ஆவது இடத்தை பிடித்துள்ளது பாக்கியலட்சுமி தொடர். கடந்த ஒரு மாதத்திற்க்கு மேலாகவே இந்த சீரியலின் டிஆர்பி மளமளவென சரிந்துள்ளது. இனியாவின் டான்ஸ் நிகழ்ச்சியை மையப்படுத்தி இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் 10-ஆவது இடத்தில், 5. 99 டிஆர்பி புள்ளிகளை பெற்றுள்ளது.