லவ் டுடே
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து கடந்த நவம்பர் 4-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசான திரைப்படம் லவ் டுடே. வெளியானது முதல் சக்கைப்போடு போட்டு வரும் இப்படம் இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது. வருகிற டிசம்பர் 2-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் லவ் டுடே திரைப்படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பரோல்
துவாரக் ராஜ் இயக்கத்தில் கடந்த நவம்பர் 11-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசான படம் பரோல். லிங்கா, ஆர்.எஸ்.கார்த்திக் நடிப்பில் வெளியான இப்படம் பரோலில் வெளிவரும் கைதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இப்படம் வருகிற டிசம்பர் 2-ந் தேதி சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது.
நித்தம் ஒரு வானம்
புதுமுக இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் கடந்த நவம்பர் 4-ந் தேதி ரிலீசான திரைப்படம் நித்தம் ஒரு வானம். அசோக் செல்வன் நாயகனாக நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி, ஷிவானி ராஜசேகர் மற்றும் ரித்து வர்மா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். இப்படம் வருகிற டிசம்பர் 2-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது.
காலங்களில் அவள் வசந்தம்
புதுமுக இயக்குனர் ராகவ் மிர்டத் இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் 30-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசான திரைப்படம் காலங்களில் அவள் வசந்தம். அஞ்சலி நாயர், கவுசிக் ராம் ஆகியோர் நடித்திருந்த இப்படம் வருகிற டிசம்பர் 1-ந் தேதி அன்று சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது.
வதந்தி (வெப் தொடர்)
கொலைகாரன் படத்தின் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள வதந்தி வெப் தொடர், வருகிற டிசம்பர் 2-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீசாக உள்ளது. இந்த வெப் தொடரை விக்ரம் வேதா படத்தின் இயக்குனர்களான புஷ்கர் காயத்ரி தயாரித்துள்ளனர். இவர்கள் தயாரிப்பில் இதற்கு முன் வெளியான சுழல் வெப்தொடருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
பிற மொழி வெளியீடுகள்
பிற மொழிகளை பொறுத்தவரை தெலுங்கில் தர்மபுரி (Dharmapuri) என்கிற படம் ஆஹாவில் ரிலீசாக உள்ளது. அதேபோல் மலையாளத்தில் மோகன்லாலின் மான்ஸ்டர் (Monster) படம் ஹாட்ஸ்டாரில் ரிலீசாக உள்ளது. இந்தியில் ராஷ்மிகாவின் குட் பாய் (GoodBye) படம் நெட்பிளிக்ஸிலும், இந்தியா லாக்டவுன் (India Lockdown) ஜீ5 தளத்திலும், குவாலா (Qala) படம் நெட்பிளிக்ஸிலும் ரிலீசாக உள்ளன.
இதையும் படியுங்கள்... துணிவு லுக்கிருக்கு எண்டு கார்டு..! மாஸ்ஸான நியூ லுக்கில் அஜித்..! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ..