தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சித்தார்த், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'கன்னத்தின் முத்தமிட்டாள்' படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து, தன்னுடைய சினிமா கேரியரை துவங்கிய நிலையில், இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
தமிழ் மொழி மட்டும் இன்றி, தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வரும் இவர்... மகா சமுத்திரம் என்ற தெலுங்கு படத்தில் நடித்த போது இவருக்கும் அந்த படத்தின் நாயகியான அதிதி ராவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து, லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது. இதனை உறுதி செய்யும் விதமாக இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்கிறார்கள். மும்பையில் இருவரும் ஒரு இடத்தில் இருந்து ஒன்றாக வெளியே வந்து அவரவர் காரில் தனித்தனியாக ஏறி செல்லும் புகைப்படம் வெளியாகியுள்ளது.