தளபதி விஜய் இன்று காலை தன்னுடைய TVK கட்சியின் கொடி மற்றும் கொடி பாடலை வெளியிட்ட நிலையில்... இதற்க்கு முதல் ஆளாக முந்திக்கொண்டு வாழ்த்து கூறியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
தளபதி விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் 'கோட்' படத்தில் நடித்து முடித்த கையோடு, தன்னுடைய அரசியல் பணிகளில் முழு கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி ஏற்கனவே தளபதி விஜய், திருச்சியில் மாநாடு ஒன்றை நடத்த முடிவு செய்ததாக தகவல் வெளியான நிலையில், ஒரு சில காரணங்களால் அவருக்கு மாநாடு நடத்த அனுமதி கொடுக்கப்படவில்லை என கூறப்பட்டது.
25
Thalapathi vijay TVK Flag And Flag Anthem
இதைத்தொடர்ந்து தன்னுடைய கட்சியினர் மற்றும் ரசிகர்களை சந்திப்பதில் உறுதியாக இருக்கும் விஜய், சென்னையிலேயே மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் அதற்கு முன்னதாக தான் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி மற்றும் கொடி பாடலை வெளியிட முடிவு செய்தார்.
இது குறித்து அறிவிப்பு நேற்று அறிக்கையாக வெளியிடப்பட்ட நிலையில், இன்று காலை 9:15 மணிக்கு சென்னை பனையூரில் உள்ள தளபதி விஜய்யின் தலைமை கழக அலுவலகத்தில், கொடி அறிமுக விழா மற்றும் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான தளபதி ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
45
Vijay Father and Mother Participate Function
இவர்களுடன் விஜயின் அம்மா - அப்பாவும் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்தனர். அனைவர் முன்பும் விஜய் பேசும் பொது... தன்னுடைய அம்மா - அப்பா வந்ததற்கு நன்றி என தெரிவித்தார். மேலும் விஜய்யின் கட்சிக் கொடியில், மேலே மற்றும் கீழே சிவப்பு நிறமும்... நடுவில் மஞ்சள் நிறமும் இடம் பெற்றுள்ளது. நடுவே இரண்டு பக்கத்திலும் யானைகள் இரண்டு காலை உயர்த்தியபடி நிற்பது போலவும், சென்டராக வாகை பூ மலரில் படமும் இடம்பெற்றிருந்தது.
தற்போது தளபதி விஜய்யின் த.வெ.க கட்சியின் பாடல் மற்றும் கொடி குறி தகவல்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது ஒருபுறம் இருக்க, தளபதி விஜய்க்கு முதல் ஆளாக முந்திக்கொண்டு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். விஜய் கையில் கொடியுடன் நிற்கும் புகைப்பதை வெளியிட்டு விஜய் அண்ணா வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான, லியோ திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.