தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் விஜய். அவர் தற்போது தீவிர அரசியலில் இறங்கி இருப்பதால் தளபதி 69 படத்துடன் சினிமாவில் இருந்து விலக உள்ளதாகவும் அறிவித்துள்ளார் விஜய். விஜய்யின் அரசியல் பயணத்தின் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்கிற தனது கட்சி பெயரை அறிவித்த விஜய், அதற்கான கொடி அறிமுக விழாவை இன்று கோலாகலமாக நடத்தி இருந்தார்.