வாகை மரத்தின் இலை, பூ, பிசின், பட்டை, வேர், விதை என அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்டது. சித்த மருத்துவத்தில் வாகைப்பூ, மரத்தின் வேர், இலை ஆகியவை பஞ்ச மூலிகைகளில் ஒன்றாக பயன்படுகிறது. கண் சார்ந்த நோய்கள், அழற்சி நோய்கள், நுரையீரல் சார்ந்த நோய்களுக்கு வாகைப் பூ மற்றும் அதன் இலை பயன்படுகின்றன.