அஜித்தின் விடாமுயற்சி உடன் பொங்கல் ரேஸில் இத்தனை படங்கள் மல்லுக்கட்ட போகிறதா?

First Published | Nov 29, 2024, 7:48 AM IST

Pongal Release Movies : பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதற்கு போட்டியாக வெளியாகும் படங்களின் பட்டியலை பார்க்கலாம்.

Pongal Release Movies

தமிழர்கள் அதிகளவில் கொண்டாடும் பண்டிகை என்றால் அது தீபாவளி மற்றும் பொங்கல் தான். இந்த இரண்டு பண்டிகைகளுக்கும் புதுப்படங்களும் போட்டிபோட்டு ரிலீஸ் ஆவது வழக்கம். அந்த வகையில் 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில், தற்போதே அதற்கு ரிலீஸ் ஆகும் படங்கள் உறுதியாகி உள்ளன. அது என்னென்ன படங்கள் என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

Vidaamuyarchi

விடாமுயற்சி

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள படம் விடாமுயற்சி. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. திரிஷா, அர்ஜுன், ரெஜினா கசண்ட்ரா, ஆரவ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க அஜர்பைஜான் நாட்டில் படமாக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் டீசர் நேற்று இரவு சர்ப்ரைஸாக வெளியான நிலையில், அதனுடன் இப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tap to resize

Vanangaan

வணங்கான்

இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்துள்ள படம் வணங்கான். இப்படத்தை பாலாவின் பி ஸ்டூடியோஸ் நிறுவனமும், சுரேஷ் காமாட்சியும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். இப்படமும் பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ளதாக படக்குழு ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது.

இதையும் படியுங்கள்... "தெறிக்கவிடலாமா"; பல நாள் காத்திருப்பு - தல ரசிகர்களுக்கு விருந்தான விடாமுயற்சி டீசர் இதோ!

Game Changer

கேம் சேஞ்சர்

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம்சரண் ஹீரோவாக நடித்துள்ள படம் கேம் சேஞ்சர். இப்படத்தில் நாயகியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். அரசியல் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு தமன் இசையமைத்து உள்ளார். எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தை தில்ராஜு தயாரித்துள்ளார். இப்படமும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக உள்ளது.

Veera Dheera Sooran

வீர தீர சூரன்

சித்தா படத்தின் இயக்குனர் சு.அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சீயான் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள படம் வீர தீர சூரன். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படமும் 2025-ம் ஆண்டு பொங்கல் ரேஸில் களமிறங்க உள்ளது. இதன் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

இதையும் படியுங்கள்... சொர்க்கவாசல் கதை என்னுடையது; வெடித்த சர்ச்சை! வைரலாகும் RJ பாலாஜி பேசிய வீடியோ!

Latest Videos

click me!