30 ரூபாய்க்கு எச்சல் இலை எடுத்து கஷ்டப்பட்ட விஜய் டிவி புகழின் இன்றைய சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

First Published | Nov 28, 2024, 7:37 PM IST

விஜய் டிவி தொலைக்காட்சியின் மூலம், ஸ்டாண்ட் அப் காமெடியனாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய புகழின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
 

Pugazh

சொந்த வாழ்க்கையில் கஷ்ட நஷ்டங்களை கடக்காமல் தொழில் ரீதியாக வெற்றிபெற்றவர்கள் என யாரும் இல்லை. அவரவர் அவர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப பிரச்சனைகளை சந்தித்துள்ளனர்.
 

Actor Pugazh Native Place

அந்த வகையில், கடலூர் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்து... இன்று தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடியனாக நடித்து வரும் புகழ், திரையுலகளில் வாய்ப்பு தேடிய காலங்களில் பல நாள் பசி பட்டினியோடு தான் தன்னுடைய வாழ்க்கையை கழித்துள்ளார்.

15 நாளில் ஓடிடிக்கு பார்சல் செய்யப்பட்ட 'கங்குவா'! வெளியானது அதிகார பூர்வ அறிவிப்பு!

Tap to resize

Pugazh Started Sirupuda Show

விஜய் டிவி 'சிரிப்புடா' என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புகழுக்கு வாய்ப்பு கிடைத்ததும், சந்தோஷமாக இரண்டு செட் துணியை ஒரு பையில் எடுத்து போட்டு கொண்டு சென்னை வந்த அவர், தங்குவதற்கு கூட இடம் இல்லாமல் தவித்து நின்றுள்ளார். அப்போதைக்கு கோடம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு தான் இவர் இளைப்பாற இடம் கொடுத்தது.

Cook With Comalai Pugazh

பின்னர் வடிவேல் பாலாஜி உதவியுடன் 'கலக்க போவது யார்' நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக களம் இறங்கினார். ஷூட்டிங் இருக்கும் அன்றைக்கு புரோடக்ஷனிலேயே சாப்பாடு கிடைக்கும் மற்ற நாட்களில், தன்னுடைய போஜனத்திற்காக கார் கிளீனிங் முதல் பல திருமண மண்டபங்களில் எச்சல் இலையை எடுக்கும் வேலை செய்துள்ளார். இதன் மூலம் கிடைக்கும் 30 ரூபாய் முதல் 50 ரூபாய் பணம் தான் இவருடைய கை செலவுக்கும் அடுத்த வேளை சாப்பாட்டுக்காக அடித்தளம்.

அண்ணன் சூர்யாவுக்கு போட்டியாக நடிப்பிலும் தூள் கிளப்பிய பிருந்தா! வைரலாகும் போட்டோஸ்!

Vadivel balaji Help to pugazh

புகழ் கஷ்டங்களை நோட் செய்த, வடிவேல் பாலாஜி இவருக்கு பல உதவிகளை செய்துள்ளார். அந்த நன்றியை தான் பல நேரங்களில் புகழ் காட்டி வருகிறார். புகழ் இன்று இந்த நிலையில் இருக்க முக்கிய காரணமும் வடிவேல் பாலாஜி தான். 
 

Pugazh About Sad Stories

பல பேட்டிகளில் தான் பட்ட கஷ்டங்களை புகழ் பகிர்ந்துள்ள நிலையில்... அன்று பல மண்டபங்களில் எச்சல் இலை எடுத்தேன் இன்று அதே போல் பெரிய பெரிய மண்டபங்களை ஓப்பன் செய்ய என்னை அழைக்கிறார்கள் என கண்ணீர் மல்க கூறி இருந்தார்.

மீண்டும் இணைகிறார்களா ஆர்த்தி - ஜெயம் ரவி? சமாதான பேச்சு வார்த்தையில் நடந்தது இது தான்!
 

KPY Pugazh

புகழுக்கு ஸ்டாண்ட் அப் காமெடி மூலம் கிடைக்காத வரவேற்பை பெற்று தந்தது விஜய் டிவியில் சூப்பர் ஹிட் காமெடி சமையல் நிகழ்ச்சியான 'குக் வித் கோமாளி' தான். கோமாளியாக கலந்து கொண்டு தன்னுடைய டைமிங் காமெடியால் பல ரசிகர்களை சிரிக்க வைத்த புகழ் இன்று அரை டஜன் படங்களுடன் படு பிசியாக நடித்து வருகிறார்.

Pugazh Net Worth

காமெடியன் என்பதை தாண்டி 'ஜூ கீப்பர்' என்கிற படத்தில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார். திரைப்படங்கள் மட்டும் இன்றி, சமீபத்தில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான 'கோலி சோடா ரைசிங்' என்கிற வெப் சீரிஸிலும் நடித்திருந்தார். விஜய் டிவியில் விஜே விஷாலுடன் சேர்ந்து, ரெடி ஸ்டெடி போ என்கிற நிகழ்ச்சியின் மூலம் ஒரு தொகுப்பாளராகவும் மாறினார் புகழ்.

இது மட்டும் இன்றி, சில பிரைவேட் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் 10 முதல் 15 லட்சம் வரை பெறுகிறார். அதே போல் திரைப்படங்களுக்கு சுமார் 50 லட்சம் முதல் 75 லட்சம் வரை சம்பளம் பெறுகிறார். இவருடைய சொத்து மதிப்பு குறித்து, தற்போது வெளியாகியுள்ள தகவலில்...  2 முதல் 4 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

நாக சைத்தாயா - சோபிதா திருமண வீடியோ உரிமை நெட்பிலிக்ஸ் வாங்கியதா? உண்மையை உடைத்த பிரபலம்!
 

Latest Videos

click me!