ட்விட்டரை தவிர்ப்பது நல்லது; எலான் மஸ்க் பற்றி பேசிய சிவகார்த்திகேயன்!

First Published | Nov 28, 2024, 6:44 PM IST

Sivakarthikeyan : சமூக வலைத்தளங்களை கடந்த சில ஆண்டுகளாக தான் தவிர்த்து வருவதாக கூறியுள்ளார் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன்.

Elon Musk

இந்த ஆண்டு வெளியான சிவகார்த்திகேயனின் "அமரன்" திரைப்படம் உலக அளவில் 300 கோடி ரூபாயை தாண்டி வசூல் சாதனை படைத்திருக்கிறது. இந்த திரைப்படம் தான் சிவகார்த்திகேயனின் கரியர் பெஸ்ட் திரைப்படமாக இப்போது மாறி இருக்கிறது என்றால் அது நிச்சயம் மிகையல்ல. திரையரங்குகளில் அமரன் திரைப்படம் நல்ல முறையில் ஓடி வருவதால், OTT தலத்தில் படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு, அதன் பிறகு அது ஒத்தி வைக்கப்பட்ட நிகழ்வும் அமர்ந்த திரைப்படத்திற்கு நடந்திருப்பது மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தியிருக்கிறது. மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் கதாபாத்திரத்தை ஏற்று எனது திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார்.

15 நாளில் ஓடிடிக்கு பார்சல் செய்யப்பட்ட 'கங்குவா'! வெளியானது அதிகார பூர்வ அறிவிப்பு!

Sivakarthikeyan

இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக ராணுவ பயிற்சிகளை சிவகார்த்திகேயன் மேற்கொண்ட நிலையில், இந்திய ராணுவத்தை சேர்ந்த சில உயர் அதிகாரிகளும் சிவகார்த்திகேயனை இத்திரைப்படத்திற்காக வெகுவாக பாராட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. கார்த்தியின் "ரங்கூன்" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ராஜ்குமார் பெரியசாமி தான், இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். இது அவருடைய இரண்டாவது படமாகும். பிரபல நடிகர் உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து வழங்கிய நிலையில் சாய் பல்லவி படத்தில் நாயகியாக நடித்த அசத்தியிருந்தார். 

Tap to resize

Actor Sivakarthikeyan

இந்த நிலையில் கோவாவில் நடந்த திரைப்பட விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், கடந்த சில ஆண்டுகளாகவே தான் சமூக ஊடக பயன்பாட்டை பெரிய அளவில் குறைத்து வருவதாகவும், தன்னுடைய ரசிகர்களுக்கு ஒரு சிம்பிளான அட்வைஸ் சொல்ல வேண்டும் என்றால், நீங்களும் சமூக ஊடகங்களை குறைவாகவே பயன்படுத்துங்கள் அது மிக மிக நல்லது. பிற விஷயங்களில் முழுமையாக ஈடுபட அது உங்களை அதிக அளவில் தூண்டும் என்று கூறியிருக்கிறார்.

vijay

இது மட்டுமல்லாமல் சமூக ஊடகங்களை குறைவாக பயன்படுத்த வேண்டும் என்று கூறிய சிவகார்த்திகேயன். குறிப்பாக ட்விட்டர் தளத்தை தவிர்ப்பது நல்லது என்றும், இதை தன்னுடைய அனுபவத்திலிருந்து சொல்வதாகவும் கூறியிருக்கிறார். என்னுடைய இந்த பேச்சை பார்த்த எலன் மஸ்க் ஒருவேளை என்னுடைய ட்விட்டர் கணக்கை முடக்கினாலும் எனக்கு கவலை இல்லை. அதுவே எனக்கு கிடைத்த முதல் வெற்றியாக தான் நான் பார்ப்பேன் என்று கூறி தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் கூறியிருக்கிறார். சிவகார்த்திகேயன் இப்பொழுது பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் பிஸியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இன்னும் மூன்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் அவருடைய நடிப்பில் உருவாக காத்திருக்கிறது. 

சூர்யாவின் வளர்ச்சி பிடிக்கல; திட்டமிட்டு தோற்கடிச்சிட்டாங்க - தயாரிப்பாளர் தனஞ்செயன்!

Latest Videos

click me!