சூர்யாவின் வளர்ச்சி பிடிக்கல; திட்டமிட்டு தோற்கடிச்சிட்டாங்க - தயாரிப்பாளர் தனஞ்செயன்!

First Published | Nov 28, 2024, 5:44 PM IST

Kanguva Movie : சூர்யாவின் கங்குவா திரைப்படம் பிளாப் படமாக மாறியதற்கு, இரு அரசியல் காட்சிகளும், இரு டாப் நடிகர்களின் ரசிகர்களும் தான் காரணம் என்று கூறியுள்ளார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.

Dhananjayan

பிரபல நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் கடந்த நவம்பர் 14ஆம் தேதி உலக அளவில் சுமார் 38 மொழிகளில், 11,500 திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது. சூர்யாவின் திரை வரலாற்றிலேயே மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலக அளவில் சுமார் 2000 கோடி ரூபாய் வரை வசூல் செய்யும் என்று இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா நம்பிக்கை தெரிவித்து இருந்தார். இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாக வெளியான கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றே கூறலாம்.

சொர்க்கவாசல் கதை என்னுடையது; வெடித்த சர்ச்சை! வைரலாகும் RJ பாலாஜி பேசிய வீடியோ!

kanguva

நவம்பர் 14ஆம் தேதி கங்குவா திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாக, அப்படத்தின் பட குழுவினர் பல இடங்களுக்கு சென்று ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, "நிச்சயம் கங்குவா திரைப்படம் உலக அளவில் 2000 கோடி வசூல் செய்யும். இந்த திரைப்படத்தோடு போட்டியிட யாரும் வர மாட்டார்கள். ஒருவேளை முதல் பாகத்தின் கதையின் ஆழம் பற்றி தெரியாமல் யாரேனும் போட்டிக்கு வரலாம். ஆனால் நிச்சயம் கங்குவா படத்தின் இரண்டாம் பாகத்தின் வெளியிட்டின் போது யாருமே இதற்கு போட்டியாக வர மாட்டார்கள்" என்று சவால் விடுத்திருந்தார்.

Tap to resize

Suriya

அதேபோல இந்த திரைப்படத்திற்காக கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்த நடிகர் சூர்யா பல மேடைகளில் இந்த திரைப்படத்தின் பெருமை குறித்து பேசினார். அது மட்டுமல்லாமல் கங்குவா திரைப்படம் வெளியானதும் இயக்குனர்கள் பலரும் இந்த திரைப்படத்தை வாய்ப்பு பிளந்து பார்க்கப் போகிறார்கள் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கங்குவா திரைப்படம் உலக அளவில் இப்போது வரை 300 கோடி ரூபாய் கூட இன்னும் முழுமையாக வசூல் செய்யவில்லை என்பது மிகப்பெரிய அதிர்ச்சி தரும் செய்தியாக மாறி இருக்கிறது.

Studio Green

இந்த சூழலில் பிரபல நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தலைவர் தனஞ்செயன், சூர்யாவின் வளர்ச்சி பிடிக்காததால் கங்குவாவை இரண்டு பெரிய நடிகர்களுடைய ரசிகர்களும் அவரது அரசியல் கருத்து பிடிக்காத இரண்டு பெரிய கட்சிகளும் சேர்ந்து திட்டமிட்டு தோற்கடித்துள்ளதாக கூறியிருக்கிறார். இன்று இது குறித்து ஒரு பதிவினை வெளியிட்டுள்ள ப்ளூ சட்டை மாறன், தனஞ்செயன் குறிப்பிடுவது நடிகர் விஜய் மற்றும் அஜித்தின் ரசிகர்களை தான் என்று கூறியிருக்கிறார். வேண்டுமென்றே வெறுப்புகளை கங்குவா திரைப்படத்தின் மீது பரப்பி நல்ல திரைப்படத்தை வெற்றியடையாமல் அவர்கள் செய்திருப்பதாகவும் கூறி இருக்கிறார் அவர்.

அண்ணன் சூர்யாவுக்கு போட்டியாக நடிப்பிலும் தூள் கிளப்பிய பிருந்தா! வைரலாகும் போட்டோஸ்!

Latest Videos

click me!