
பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன்களான சூர்யா - கார்த்தி இருவருமே தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் நிலையில், சிவகுமாரின் மகள் பிருந்தா மட்டும் சினிமாவில் தலை காட்டவில்லை. ஆனால் இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு, மேடை நாடகம் ஒன்றில் நடித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகர் சூர்யா நடிப்பில் நவம்பர் 14ஆம் தேதி வெளியான 'கங்குவா' திரைப்படம் அதிகமான விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. சூர்யா நடிப்பில் வெளியான பல படங்கள் அப் அண்ட் டவுனை சந்தித்திருந்தாலும், எந்த படமும் இந்த அளவுக்கு மோசமான விமர்சனங்களை பெற்றது இல்லை. என்பதே சினிமா விமர்சகர்களின் ஆதங்கமாக உள்ளது.
நாக சைத்தாயா - சோபிதா திருமண வீடியோ உரிமை நெட்பிலிக்ஸ் வாங்கியதா? உண்மையை உடைத்த பிரபலம்!
இப்படி தொடர்ந்து 'கங்குவா' மோசமான விமர்சனங்களை பெற முக்கிய காரணம், இந்த படத்திற்கு கொடுக்கப்பட்ட ஹைப்பும், இப்படத்தின் பட்ஜெட்டும் தான். எப்படியும் கங்குவாவை தட்டி ஓட வைக்க சூர்யாவின் மனைவி ஜோதிகாவரை இறங்கி விமர்சனம் செய்த நிலையில்... படம் பட்ஜெட்டில் பாதியை கூட வசூலிக்கவில்லை. இதனால், சூர்யா இயக்குனர் மீது கடும் கோபத்தில் இருப்பதாக சில தகவல்கள் வெளியானது.
கங்குவா தோல்வியால், மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்ட சூர்யா மனைவியுடன் மூகாம்பிகை கோவிலுக்கு சென்ற நிலை, ஜோதிகாவும் கோவில் கோவிலாக சென்று கணவருக்காக தன்னுடைய கணவருக்காக கடவுளிடம் வேண்டி கொண்டு வருகிறார். நடிப்பில் சறுக்கி இருந்தாலும்... கடந்த செப்டம்பர் மாதம் சூர்யா தயாரிப்பில் வெளியான மெய்யழகன் முதலுக்கு மோசம் இல்லாத வகையில் வசூலித்தது சூர்யாவுக்கு ஒரு ஆறுதல் எனலாம். இந்த படத்தில் கார்த்தி தான் ஹீரோவாக நடித்திருந்தார். முக்கிய கதாபாத்திரத்தில் அரவிந்தசாமி நடிக்க, கார்த்திக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடித்திருந்தார்.
மீண்டும் இணைகிறார்களா ஆர்த்தி - ஜெயம் ரவி? சமாதான பேச்சு வார்த்தையில் நடந்தது இது தான்!
கங்குவாவின் தாக்கத்தில் இருந்து மெல்ல மெல்ல வெளியே வந்து கார்த்தி சுப்புராஜ் இயக்கம் 44-ஆவது படத்திலும், ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் சூர்யா 45 படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. கங்குவா கொடுக்க தவறிய வெற்றியை இந்த இரு படங்களுக்கும் சூர்யாவுக்கு கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆவலாகவும் உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்கிற பழமொழிக்கு ஏற்ப தன்னுடைய தந்தை போலவே மேடை நாடகங்களில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி அசர வைத்துள்ளார் சூர்யாவின் தங்கை பிருந்தா. கடந்த சில வருடங்களுக்கு முன்பு 'கருணை கடல் கந்தவேல்' என்கிற டான்ஸ் ட்ராமாவை கலைமாமணி கிருஷ்ணகுமாரி நரேந்திரன் இயக்கி இருந்த நிலையில் அதில் பார்வதி தேவியாக பிருந்தா நடித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பிருந்தா ஒரு பாடகியாக இருக்கும் நிலையில், பொன்மகள் வந்தாள், ஜாக்பாட், ராட்சசி, ஓ2 போன்ற படங்களில் பாடியிருந்தார். அதேபோல் பிரம்மாஸ்திரம் படத்தில் ஆலியா பட்-க்கு டப்பிங் பேசியிருந்ததும் இவர்தான்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - தனுஷ் விவாகரத்து வழக்கு! நீதி மன்றத்தின் தீர்ப்பு என்ன?
இவருக்கு ஏற்கனவே, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'கன்னத்தில் முத்தமிட்டால்' திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிக்க ஆப்பர் வந்த நிலையில், சிவகுமார் இதெல்லாம் ஒற்று வராது என அந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார். பிருந்தாவும் அந்த சமயத்தில் நடிக்கும் எண்ணத்தில் இல்லை என்றே கூறப்படுகிறது. அப்போது சினிமா வாய்ப்பை தவறவிட்டாலும், திருமணமாகி குழந்தைகள் பிறந்த பின்னர் மேடை நாடகத்தில் கலக்கி உள்ளார்.