நாக சைத்தாயா - சோபிதா திருமண வீடியோ உரிமை நெட்பிலிக்ஸ் வாங்கியதா? உண்மையை உடைத்த பிரபலம்!

First Published | Nov 28, 2024, 2:18 PM IST

நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமண வீடியோவை, நெட்பிலிக்ஸ் வாங்கியதா? அதன் உண்மை பின்னணி என்ன? என்பது பற்றி பிரபல சினிமா வணிகவியாளர் ரமேஷ் பாலா தெரிவித்துள்ளார்.
 

Naga Chaitanya

பிரபல தெலுங்கு நடிகரும், சமந்தாவின் முன்னாள் கணவருமான நாக சைதன்யா அடுத்த மாதம் தன்னுடைய காதலி நடிகை சோபிதாவை திருமணம் செய்ய உள்ளார். இவர்களுடைய திருமணம் குறித்து அவ்வபோது சுவாரஸ்யமான தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், கடந்த சில தினங்களாக நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் திருமண வீடியோ உரிமையை netflix நிறுவனம் ரூபாய்.50 கோடிக்கு வாங்கி உள்ளதாக தகவல் ஒன்று உலா வந்து கொண்டிருக்கிறது.

Sobhita Dulipala

இதனை நயன்தாராவின் திருமண வீடியோவோடு ஒப்பிட்டு பலர் விமர்சித்து வந்தனர். காரணம் நயன்தாராவின் திருமண வீடியோ ஒளிபரப்பு உரிமையை, ரூ. 25 கோடிக்கு netflix நிறுவனம் வாங்கியதாக கூறப்பட்ட நிலையில், அதைவிட இரண்டு மடங்கு பணம் கொடுத்து சைத்தாயா - சோபிதாவின் திருமண வீடியோ வாங்கப்பட்டதாக கூறப்பட்டது.
 

Tap to resize

Netflix

மேலும் நயன்தாராவின் திருமணம் மாடர்ன் வெட்டிங் ஸ்டைலில் நடந்த நிலையில், சைதன்யா - சோபிதா திருமணம் பாரம்பரிய முறைப்படி சுமார் 8 மணி நேரம் நடத்த திட்டமிட்டு இருப்பதால் இவ்வளவு பெரிய தொகை கொடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. ஆனால் இது குறித்து நாக சைதன்யா மற்றும் சோபிதாவிடம் இருந்த எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில் இது வதந்தியாக இருக்கலாம் என்று டோலிவுட் வட்டாரங்களில் கூறப்பட்டது.
 

Naga Chaitanya-Sobhita Dhulipala Marriage

சமீபத்தில் மகன் சைதன்யா திருமணம் குறித்து பேசிய நாகார்ஜுனா, தன்னுடைய மகன் மற்றும் மருமகள் இருவருமே ஒட்டுமொத்த திருமண பொறுப்பையும் அவர்களே ஏற்றுக் கொண்டதாகவும், இதை அவர்கள் திருமணத்தை எளிமையாக நடத்த ஆசைப்படுகின்றனர். எனவே குறிப்பிட்ட நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் மட்டுமே கலந்து கொள்கிறார்கள். அவர்களுக்கான அழைப்பிதழ்களையும் அவர்களே தேடிச்சென்று கொடுத்துள்ளனர் என கூறியிருந்தார். உண்மையில் இது எனக்கு மிகவும் நிம்மதியை கொடுத்ததாகவும் நாகார்ஜுனா குறிப்பிட்டு பேசினார்.
 

Ramesh Bala

இதைத் தொடர்ந்து தற்போது netflix திருமண ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றியதாக கூறப்படும் தகவல் முற்றிலும் வதந்தி என சினிமா வர்த்தக நிபுணர் ரமேஷ் பாலா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது. நாக சைதன்யா மற்றும் சோபித்த திருமணம் ஓ டி டி நிறுவனத்திற்கு விற்கப்பட்டதாக வெளியாகும் தகவல் முற்றிலும் வதந்தி. இது எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் வெளியான தகவல். சைதன்யா - சோபிதா ஜோடி தங்களுடைய திருமணத்தை பிரைவேட்டாகவும் பர்சனலாகவும் நடத்தவே ஆசைப்படுகின்றனர் எனக் கூறி தீயாய் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
 

Latest Videos

click me!