சவுண்டு சரோஜாவாக மாறி; ராணவ்வை அடிக்க பாய்ந்த செளந்தர்யா - பிக் பாஸில் வெடித்த பிரச்சனை

First Published | Nov 28, 2024, 1:50 PM IST

Raanav Fight with Soundarya : பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்று வரும் ‘நீயும் பொம்மை நானும் பொம்மை’ டாஸ்க்கின் போது ராணவ் உடன் செளந்தர்யா, ஜாக்குலின் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Bigg Boss Raanav

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் வார வாரம் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்படும். அந்த டாஸ்க்கின் முடிவில் யார் நன்றாக விளையாடினார்களோ அவர்கள் பெஸ்ட் பெர்பார்மராக தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த வார தலைவர் போட்டியில் கலந்துகொள்ள முடியும். அதுமட்டுமின்றி நாமினேஷன் ஃப்ரீ பாஸை வெல்லும் வாய்ப்பையும் பெற முடியும். அந்த வகையில் இந்த வாரம், நானும் பொம்மை, நீயும் பொம்மை என்கிற டாஸ்க் நடத்தப்படுகிறது.

Rayan vs Raanav

இந்த டாஸ்க் தொடங்கிய முதல் நாளே மஞ்சரிக்கும் அன்ஷிதாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் மழை காரணமாக இந்த டாஸ்க் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் தொடங்கப்பட்டது. அப்போது விஷாலுக்கும் ஜாக்குலினுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலுக்கு இடையே தர்ஷிகா பொம்மையை யாரும் எடுக்காமல் விட்டதால் அவர் இந்த போட்டியில் இருந்து வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்... ரஜினிகாந்த் பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட்!

Tap to resize

Jacquline vs Raanav

பின்னர் இந்த டாஸ்க் இன்று மீண்டும் தொடங்கி நடைபெற்று உள்ளது. அப்போது இந்த கேமில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களும் தாங்கள் வெளியேற்ற நினைக்கு போட்டியாளரின் பொம்மை உள்ளே செல்ல விடாமல் தடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ராணவ்வின் பொம்மையை ரயான், ஜெஃப்ரி ஆகியோர் எடுத்து வைத்துக் கொள்ள, அவர்களிடம் மல்லுக்கட்டி அந்த பொம்மையை வாங்க முயற்சித்திருக்கிறார் ராணவ். அப்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ரயான், ராணவ்வை அடிக்க பாய்ந்த காட்சிகள் இன்றைய முதல் புரோமோவில் வெளியானது.

Soundarya

இதையடுத்து தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது புரோமோவில், ராணவ்விடம் ரயானுக்கு சப்போர்ட்டாக ஜாக்குலின் சண்டைபோட, அவர் ஒரு கெட்ட வார்த்தை சொல்லி திட்டி இருக்கிறார். இதனால் கடுப்பான ஜாக்குலின் மற்றும் செளந்தர்யா, ராணவ்விடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எப்படி நீ வாய மூடுனு சொல்லுவ, மரியாதையா பேச கத்துக்கோ என சொல்ல, அதற்கு ராணவ், செளந்தர்யா முடியை தூக்கி போடுவதை போல் செய்து காட்டி, நீ மரியாதை கொடு என சொல்கிறார்.

Soundarya, Jacquline

உடனே டென்ஷன் ஆன செளந்தர்யா நான் அப்படி தான் டா பண்ணுவேன் என எகிற, மறுபுறம் இப்படி கெட்ட வார்த்தையெல்லாம் சொல்லாத என ஜாக்குலின் சொன்னதும் அதற்கு ராணவ் மன்னிப்பு கேட்கிறார். அதை ஏற்க மறுக்கும் ஜாக்குலின் நானும் உன்னை பளார்னு அரைஞ்சிட்டு மன்னிப்பு கேட்கவா என பதிலடி கொடுக்கிறார். இதையெல்லாம் பார்க்கும் போது இந்த விவகாரத்தில் ரயான் அல்லது ராணவ் ஆகிய இருவரில் ஒருவருக்கு மஞ்சள் கார்டு கொடுக்க வாய்ப்பு இருக்கிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

இதையும் படியுங்கள்... ஜாம் ஜாம்னு நடைபெற்ற சிறகடிக்க ஆசை சீரியல் ஹீரோ வெற்றி வசந்த் திருமணம்!

Latest Videos

click me!