ரஜினிகாந்த் பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட்!

Published : Nov 28, 2024, 12:34 PM IST

Coolie and Jailer 2 Update : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் டிசம்பர் 12-ந் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்று கூலி மற்றும் ஜெயிலர் 2 பட அப்டேட்டுகள் வெளியாக உள்ளதாம்.

PREV
14
ரஜினிகாந்த் பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட்!
Rajinikanth

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் வருகிற டிசம்பர் 12ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. ரஜினிகாந்தின் பிறந்தநாள் என்றாலே அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளியிடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு இரண்டு அப்டேட்டுகள் வரிசைக்கட்டி ரிலீஸ் ஆக உள்ளது. அதில் ஒன்று கூலி படத்தின் அப்டேட் மற்றொன்று நெல்சன் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ள ஜெயிலர் 2 படத்தின் அப்டேட்.

24
coolie

ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது கூலி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கிரீஷ் கங்காதரன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிட்ப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

இதையும் படியுங்கள்... அன்று கிரிஞ்ச் நடிகை; இன்று தேசிய விருது நாயகி! யார் இந்த குழந்தை தெரிகிறதா?

34
Jailer 2

அதேபோல் ரஜினிகாந்த் கைவசம் உள்ள மற்றொரு படம் ஜெயிலர் 2. இப்படத்தின் முதல் பாகம் மாஸ் ஹிட்டானதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை ஹுகும் என்கிற பெயரில் எடுக்க உள்ளனர். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார். இப்படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது. ரஜினி கைவசம் உள்ள இந்த இரண்டு படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது.

44
Rajinikanth Birthday Special

இந்த இரண்டு படங்களின் அப்டேட்டுகள் ரஜினி பிறந்தநாளுக்கு வர உள்ளன. அதன்படி கூலி படத்தின் டீசர் அல்லது கிளிம்ப்ஸ் வீடியோ ரஜினி பிறந்தநாளன்று வெளிவர வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் ஜெயிலர் 2 படத்தின் புரோமோவும் அன்று ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. அதன் ஷூட்டிங் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இப்படி ஒரே நாளில் இரண்டு படங்களின் அப்டேட்டும் வெளிவந்த உள்ளதால் இந்த ஆண்டு ரஜினி பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்திருக்கிறது.

இதையும் படியுங்கள்... ஜாம் ஜாம்னு நடைபெற்ற சிறகடிக்க ஆசை சீரியல் ஹீரோ வெற்றி வசந்த் திருமணம்!

Read more Photos on
click me!

Recommended Stories