ஜாம் ஜாம்னு நடைபெற்ற சிறகடிக்க ஆசை சீரியல் ஹீரோ வெற்றி வசந்த் திருமணம்!

First Published | Nov 28, 2024, 11:26 AM IST

Vetri Vasanth - Vaishnavi Wedding : சிறகடிக்க ஆசை சீரியலில் நாயகனாக நடித்து பேமஸ் ஆன நடிகர் வெற்றி வசந்தின் திருமணம் இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

Vetri Vasanth Marriage

சினிமாவை போல் சின்னத்திரையிலும் காதல் திருமணம் செய்துகொள்ளும் பிரபலங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. ஏற்கனவே செந்தில் - ஸ்ரீஜா, சேத்தன் - தேவதர்ஷினி, சஞ்சீவ் - ஆலியா மானசா, சித்து - ஸ்ரேயா ஆகியோர் சீரியல்களில் நடித்து பின்னர் காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது அந்த லிஸ்ட்டில் லேட்டஸ்டாக இணைந்துள்ள ஜோடி தான் வெற்றி வசந்த் மற்றும் வைஷ்ணவி சுந்தர்.

Vetri Vasanth - Vaishnavi Marriage

இவர்கள் இருவருமே விஜய் டிவி சீரியல்களில் நடித்துள்ளனர். இதில் வெற்றி வசந்த் விஜய் டிவியில் சக்கைப்போடு போட்டு வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார். இந்த சீரியல் தான் டிஆர்பி ரேட்டிங்கில் தூள் கிளப்பி வருகிறது. அதேபோல் அவரின் காதலி வைஷ்ணவி, விஜய் டிவியில் பொன்னி சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.

Tap to resize

Serial Actor Vetri Vasanth Marriage

இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக ரகசியமாக காதலித்து வந்தனர். இதனிடையே அண்மையில் இந்த ஜோடிக்கு குடும்பத்தினர் சம்மதத்துடன் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. அதில் சின்னத்திரை பிரபலங்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இதையும் படியுங்கள்... காதலில் விழுந்து கணவன், மனைவியாக மாறிய தமிழ் சீரியல் ஜோடிகள் இத்தனை பேரா?

Siragadikka Aasai serial hero Vetri Vasanth Marriage

இந்த நிலையில், வெற்றி வசந்த் - வைஷ்ணவி ஜோடியின் திருமணம் இன்று சென்னையில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. பட்டு வேட்டி சட்டையில் வெற்றி வசந்தும், பட்டுச் சேலையில் தேவதை போல் வைஷ்ணவியும் மணமக்களாக ஜொலிக்க, அவர்களை வாழ்த்த சின்னத்திரை பட்டாளமே வந்துள்ளது.

Vetri Vasanth Marriage Photos

குறிப்பாக சிறகடிக்க ஆசை சீரியல் நட்சத்திரங்களும், பொன்னி சீரியல் நட்சத்திரங்களும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர். வெற்றி வசந்த் - வைஷ்ணவி சுந்தர் ஜோடியின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது. அவர்களுக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.

Vetri Vasanth Wedding

வைஷ்ணவி கழுத்தில் தாலி கட்டியதும், அவர் நெற்றியில் முத்தமிட்டு தன் அன்பை வெளிப்படுத்தினார் வெற்றி வசந்த். இவர்களின் திருமண புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், சூர்யா - ஜோதிகா போல் தீரா காதலோடு இருவரும் வாழ வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... ரஜினிகாந்த், கமல், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களின் சாயலில் உள்ள சீரியல் ஹீரோஸ்!

Latest Videos

click me!