விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் மீண்டும் ஒரு 96! அதிரடியாக வந்த அப்டேட்

First Published | Nov 28, 2024, 9:37 AM IST

96 Movie Sequel : பிரேம் குமார் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன காதல் படம் 96. 

Trisha, Vijay Sethupathi

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளிப் பருவம் என்பது மறக்க முடியாத பல அனுபவங்களை கொண்டிருக்கும். அப்படிப்பட்ட பள்ளிப் பருவத்தில் காதல் மலர்வது என்பது இயல்பானது தான். அந்த பள்ளிப் பருவ காதலை மிகவும் அழகாக திரையில் கொண்டுவந்த படம் தான் 96. பள்ளிப் பருவ காதலர்கள் 20 ஆண்டுகளுக்கு பின் சந்திக்கும் போது என்ன நடக்கும் என்பதை மிகவும் யதார்த்தமாக காட்டிய படம் 96. இப்படம் கடந்த 2018-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

96 movie

பள்ளி ரியூனியனை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தின் உண்மையான வெற்றி என்னவென்றால், இப்படம் ரிலீஸ் ஆன பின்னர் பலரும் தங்கள் பள்ளிப் பருவ நண்பர்களுடன் ரியூனியனை கொண்டாடி மகிழ்ந்தனர். அப்படி ஒரு தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியதால் 96, தமிழ் சினிமாவின் ஒரு மாஸ்டர் பீஸ் படமாக கருதப்படுகிறது. இப்படத்தின் வெற்றி நடிகர் விஜய் சேதுபதிக்கு மட்டுமின்றி நடிகை திரிஷாவுக்கும் அவரது கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இதையும் படியுங்கள்... யங் லுக்கில் மிரட்டும் விஜய் சேதுபதி; வெற்றிமாறனின் விடுதலை பார்ட் 2 - ட்ரைலர் இதோ!

Tap to resize

96 movie Part 2 on cards

96 படம் தமிழில் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனதை தொடர்ந்து அப்படத்தை தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீமேக் செய்தனர். ஆனால் தமிழில் கிடைத்த வெற்றி மற்ற மொழிகளில் இப்படத்திற்கு கிடைக்கவில்லை. 96 படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரேம்குமார் மெய்யழகன் என்கிற திரைப்படத்தை இயக்கினார். கார்த்தி நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் திரைக்கு வந்த அப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

96 Tamil Movie Sequel

இந்நிலையில், இயக்குனர் பிரேம் குமாரின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி 96 படத்தின் இரண்டாம் பாகத்தை தான் அடுத்ததாக அவர் இயக்க உள்ளாராம். அப்படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகளும் முடிவடைந்துவிட்டதாம். இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். இப்படத்தின் மூலம் நடிகர் விஜய் சேதுபதியும் நடிகை திரிஷாவும் மீண்டும் ஜோடி சேர உள்ளனர். இப்படத்திற்கும் கோவிந்த் வஸந்தா தான் இசையமைக்க உள்ளாராம். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... விடுதலை 2 ட்ரைலர் வெளியீடு; மேடையில் வைத்து சூரியை கலாய்த்து தள்ளிய இளையராஜா!

Latest Videos

click me!