ஒரே நாளில் இறங்கும் அரை டஜன் படங்கள்; இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன?

Published : Nov 28, 2024, 08:47 AM ISTUpdated : Nov 28, 2024, 08:48 AM IST

This Week OTT Release Movies : தீபாவளி ரிலீஸ் படங்கள் உள்பட இந்த வாரம் ஓடிடி தளங்களில ரிலீஸ் ஆக உள்ள தமிழ் படங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
18
ஒரே நாளில் இறங்கும் அரை டஜன் படங்கள்; இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன?
OTT Release Tamil Movies on November 29

தமிழ்நாட்டில் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் தியேட்டரில் ரிலீசாகும் படங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. ஆனால் அதே வேளையில் ஓடிடியில் ரிலீசாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அந்த வகையில் நவம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ஓடிடி தளங்களில் அரை டஜன் தமிழ் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அது என்னென்ன படங்கள்... எந்தெந்த ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆக உள்ளது என்பதை பார்க்கலாம்.

28
Deepavali Bonus

தீபாவளி போனஸ்

ஜெயபால் இயக்கத்தில் விக்ராந்த் நாயகனாக நடித்துள்ள படம் தீபாவளி போனஸ். இப்படத்தில் நடிகர் விக்ராந்துக்கு ஜோடியாக ரித்விகா நடித்துள்ளார். தீபக் குமார் டாலா தயாரித்துள்ள இப்படம் நேரடியாக ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது.

38
Andhagan

அந்தகன்

பிரசாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் திரைக்கு வந்த படம் அந்தகன். இந்தியில் ரிலீஸ் ஆன அந்தாதூண் படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த அந்தகன். சிம்ரன், வனிதா, சமுத்திரக்கனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் மூன்று மாதத்திற்கு பின் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தற்போது ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

48
Lucky Baskhar

லக்கி பாஸ்கர்

துல்கர் சல்மான் நடிப்பில் தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த படம் லக்கி பாஸ்கர். இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கி இருந்தார். இப்படத்தில் துல்கருக்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடித்திருந்தார். இப்படம் இன்று (நவம்பர் 28) முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

இதையும் படியுங்கள்... கங்குவா கதறவிட்டது பத்தாதா! சூர்யாவின் அடுத்த படத்துக்கு ‘க’ டைட்டிலா?

58
Brother

பிரதர்

ஜெயம் ரவி நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வந்த படம் பிரதர். இப்படத்தை எம்.ராஜேஷ் இயக்கி இருந்தார். இப்படத்தில் ஜெயம் ரவி உடன் பிரியங்கா மோகன், நட்டி நட்ராஜ், பூமிகா, சீதா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படம் வருகிற நவம்பர் 29-ந் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

68
Bloody Beggar

ப்ளடி பெக்கர்

கவின் நடிப்பில் தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வந்த படம் ப்ளடி பெக்கர். இப்படத்தை சிவபாலன் இயக்கி இருந்தார். இயக்குனர் நெல்சன் இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். தியேட்டரில் பெரியளவில் சோபிக்க தவறிய இப்படம் வருகிற நவம்பர் 29-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

78
Sshhh

ஷ்

ப்ரித்வி ஆதித்யா, வாலி மோகன் தாஸ், ஹரிஷ், கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள படம் ஷ். இப்படத்தில் இனியா, சோனியா அகர்வா, ஐஸ்வர்யா தத்தா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தியில் ஹிட் ஆன லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த ஷ். இப்படம் நவம்பர் 29-ந் தேதி நேரடியாக ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்டிரீம் ஆக உள்ளது.

88
Parachute

பாராசூட்

ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள வெப் தொடர் தான் பாராசூட். இந்த வெப் தொடரில் கிஷோர், கிருஷ்ணா, காளி வெங்கட், கனி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த வெப் தொடர் வருகிற நவம்பர் 29-ந் தேதியில் இருந்து டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்...  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - தனுஷ் விவாகரத்து வழக்கு! நீதி மன்றத்தின் தீர்ப்பு என்ன?

click me!

Recommended Stories