ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - தனுஷ் விவாகரத்து வழக்கு! நீதி மன்றத்தின் தீர்ப்பு என்ன?

First Published | Nov 27, 2024, 8:32 PM IST

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தங்களுடைய விவாகரத்து முடிவில் உறுதியாக இருப்பதாக, நவம்பர் 21ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி தங்களுடைய விருப்பத்தை நீதிபதி முன் தெரிவித்ததை தொடர்ந்து, இன்று இவர்களுடைய விவாகரத்து குறித்த இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 

Dhanush and Aishwarya Divorced

தமிழ் சினிமாவில், சாதிக்க திறமை இருந்தால் போதும்... அழகு முக்கியம் இல்லை என நிரூபித்த நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் 'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தில் நடித்த போது, இவருடைய தோற்றத்தால் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானார். இந்த ஒரே படத்தில் இவரை மக்கள் புறக்கணித்து விடுவார்கள் என பலர் வெளிப்படையாகவே விமர்சித்த நிலையில், அந்த விமர்சனங்களை கடந்து தனக்கு ஏற்ற போல கதையை தேர்வு செய்து நடித்து இன்று தமிழ் சினிமாவில் ரூ.30 முதல் ரூ. 40 கோடி வரை சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார்.
 

Dhanush Movies

அதே போல் தன்னுடைய நடிப்பின் திறமையால், கோலிவுட், டோலிவுட், பாலிவுட் தாண்டி ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்த பெருமை தனுஷுக்கு உண்டு. நடிகர் தனுஷின் வளர்ச்சியில் அவருடைய முன்னாள் மனைவி ஐஸ்வர்யாவின் பங்கு முக்கியமானது. ஐஸ்வர்யா தான் தனுஷுக்கு பல விஷயங்களில் பக்க பலமாக இருந்தவர். அதேபோல் தனுஷ் இன்று ஆங்கிலத்தை சரளமாக பேச முக்கிய காரணம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான்.

தங்க மாலை; 600 சவரன் நகை! நெல்லையை திரும்பி பார்க்க வைத்த வேல ராமமூர்த்தி பேத்தியின் திருமணம்!
 

Tap to resize

Rajinikanth Daughter Aishwarya

ஐஸ்வர்யா தனுஷை விட மூன்று வயது மூத்தவராக இருந்த போதும், அவரை உருகி உருகி காதலித்து 2004 ஆம் ஆண்டு தனுஷ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா - லிங்கா என்கிற இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், திருமணம் ஆகி 18 ஆண்டுகளுக்கு பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக.. கடந்த 2022 ஆம் ஆண்டு சுமுகமாக விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக அறிவித்தனர். மேலும் விவாகரத்து குறித்து அறிவித்த பின்னரும், இவர்கள் இருவரும் நீதிமன்றத்தை நாடி செல்லாததால் மீண்டும் இருவரும் தங்களுடைய பிள்ளைகளுக்காக இணைந்து வாழ்வார்கள் என கூறப்பட்டது. அதேபோல் சில நம்பத் தகுந்த வட்டாரங்களிலும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுடன் இடையே உள்ள பிரச்சனையை தீர்க்க சிலர் முயன்று வருவதாகவும், ஆனால் ஐஸ்வர்யா தான் விவாகரத்து பெறுவதில் மிகவும் பிடிவாதமாக இருப்பதாக கூறப்பட்டது.
 

Dhanush and Aishwarya Wedding Canceled

இதுபோன்ற சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஐஸ்வர்யா கடந்த ஆண்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இதுவரை மூன்று முறை விசாரணைக்கு வந்துள்ளது. இரண்டு முறை ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவருமே நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில்... விவாகரத்து வழக்கு மற்றொரு தேதிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் நவம்பர் 21 ஆம் தேதி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருமே நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், நீதிபதி முன்பு விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

பிரஷாந்துக்கு இந்த நிலைமையா? 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பே இல்லாமல் வெளியான 'அந்தகன்'!

Aishwarya Dhanush

இதை தொடர்ந்து, இன்று இவர்களின் விவாகரத்துக்கான இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்த நிலையில், சற்று முன்னர் இவர்களின் விவாகரத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதாகவும்... இவர்களுக்கு 2004 ஆம் ஆண்டு நடந்த திருமணம் செல்லாது எனவும் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ஐஸ்வர்யா - தனுஷ் இருவரும் முழுமையாக தங்களுடைய திருமண உறவில் இருந்து பிரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!