
தமிழ் சினிமாவில் 90-களில் டாப் ஸ்டாராக வலம் வந்தவர் பிரசாந்த். அஜித் - விஜய்யை காட்டிலும், பல ஹிட் படங்களில் நடித்து, லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிய இவர், தன்னுடைய திருமண வாழ்க்கைக்கு பின்னர் ஏற்பட்ட பிரச்சனைகளால் மனதளவில் அதிக மன உளைச்சலுக்கு ஆளானார்.
எனவே சரிவர திரையுலகில் இவரால் கவனம் செலுத்த முடியாமல் போனது. மேலும் பாகுபலி பிரபாஸை போல் இவர் சுமார் மூன்று ஆண்டுகள் காத்திருந்து நடித்த வரலாற்று திரைப்படமான 'பொன்னர் சங்கர்' மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான நிலையில், படு தோல்வியை சந்தித்தது. கலைஞர் கதை - திரைக்கதை எழுதிய இந்த படம், ஏனோ ரசிகர்கள் மனதை கவர்ந்திழுக்க தவறியது. இந்த படத்திற்கு செலவு செய்த பட்ஜெட்டில் பாதியை கூட வசூல் செய்ய முடியாமல் திணறியது இப்படம்.
தரமான படத்தில் கம் பேக் கொடுக்க வேண்டும் என பிரஷாந்த் காத்திருந்த நிலையில், இவருடைய இவருடைய மார்க்கெட் அதலபாதாளத்திற்கு போனதால், பிரசாந்தை வைத்து இயக்குனர்கள் யாரும் படம் இயக்க முன் வரவில்லை. அப்படியே வந்தாலும் தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லை. எனவே சில படங்களை பிரஷாந்த் தன்னுடைய அப்பாவின் சொந்த புரோடக்ஷனில் நடித்தார். அப்படி வெளியான ஜானி, சாகசம் போன்ற படங்கள் அடுத்தடுத்து மண்ணை கவ்வியது.
ஒரு கட்டத்தில், தெலுங்கு திரைப்படத்தில் ராம் சரணுக்கு அண்ணனாக குணச்சித்திர வேடத்தில் பிரஷாந்த் நடித்தார். சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான, 'கோட்' படத்திலும் நடிகர் பிரஷாந்த் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும் இந்த படத்திற்காக இவருக்கு ரூ. 5 கோடி சம்பளம் வழங்க பட்டதாகவும் தகவல் வெளியானது.
கோட் படத்திற்கு முன்னர், நடிகர் பிரஷாந்த் தன்னுடைய தந்தை தியாகராஜன் இயக்கத்தில் நடித்திருந்த திரைப்படம், 'அந்தகன்'. ஹிந்தியில் நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான 'அந்தாதூன்' என்கிற படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் வெளியானது. கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான இந்த திரைப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பிரசாந்துக்கு மீண்டும் சிறந்த கம்பேக்காக அமைந்தது.
என்னுடைய 2 விவாகரத்துக்கும் காரணமே அப்பா தான்! வனிதா விஜயகுமார் எமோஷ்னல் பகிர்வு!
இந்த படத்தில் பிரசாத்துக்கு ஜோடியாக நடிகை பிரியா ஆனந்த் நடித்திருந்த நிலையில், இவரை தவிர சிம்ரன், சமுத்திரகனி, கே எஸ் ரவிக்குமார், வனிதா விஜயகுமார், கார்த்திக், ஊர்வசி, போன்ற பலர் நடித்திருந்தனர். பொதுவாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் படங்கள் நான்கு வாரத்திலேயே ஓடிடி தளத்தில் வெளியாகுவது உண்டு. ஆனால் 'அந்தகன்' திரைப்படம், ரிலீஸ் ஆகி மூன்று மாதத்திற்கு பின்னர் எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி, அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
சில தோல்வி படங்களை படங்கள் மட்டுமே ஓடிடி-யில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வெளியாவது உண்டு. ஆனால் டாப் ஸ்டாராக திரை உலகை கலக்கிய நடிகர் பிரசாந்தின் ஹிட் திரைப்படம் தற்போது எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வெளியாகி உள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. நெட்டிசன்கள் பிரஷாந்துக்கே இந்த நிலையா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.