
நடிகை அதிதி ராவ் மற்றும் சித்தார்த் இருவரும் கடந்த செப்டம்பர் மாதம், அதிதியின் குலதெய்வ கோவிலில் திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுடைய திருமண புகைப்படங்கள் சிலவற்றை அவர்கள் வெளியிட அவை வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் 'பாய்ஸ்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சித்தார்த். இயக்குனர் மணிரத்தினத்தின் உதவி இயக்குனரான தன்னுடைய திரையுலக பணியை துவங்கிய சித்தார்த் 'பாய்ஸ்' படத்தில் நடித்தது, அவரே சற்றும் எதிர்பாராத ஒன்று. இதனை அவரே சில பேட்டிகளிலும் கூறியுள்ளார்.
என்னுடைய 2 விவாகரத்துக்கும் காரணமே அப்பா தான்! வனிதா விஜயகுமார் எமோஷ்னல் பகிர்வு!
இளம் வயதிலேயே இயக்குனராக வேண்டும் என்று முடிவு செய்து இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக சேர்ந்த சித்தார்த், எதேர்ச்சியாக பாய்ஸ் படத்தின் ஆடிஷனில் கலந்து கொள்ள, பின்னர் இவரையே ஷங்கர் ஹீரோவாக்கினார். முதல் படத்திலேயே மிகவும் போல்டான சில காட்சிகளில் நடித்து விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றார்.
ஒரு ஹீரோவாக ஹிட் கொடுத்ததால், அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு சித்தார்த்துக்கு கிடைத்தது. தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே மாதிரியான கேரக்டரில் நடிக்காமல், ஒவ்வொரு படத்திற்கும் இவர் காட்டிய வித்தியாசமே, இவரை தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனித்து காட்டியது.
அப்பா ஸ்டாலினை விட 3 மடங்கு சொத்துக்கு அதிபதி! ராஜா வீட்டு கன்னுகுட்டி உதயநிதியின் சொத்து மதிப்பு!
காதலில் சொதப்புவது எப்படி, ஜிகர்தண்டா, உதயம் என்.எச்.4, அரண்மனை 2, காவிய தலைவன் என பல படங்களில் நடித்தார். நடிகராக மட்டும் இன்றி கடந்த ஆண்டு இவர் தயாரித்து - ஹீரோவாக நடித்திருந்த சித்தா திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. குழந்தைகளுக்கு அநீதியை தோலுரித்திருந்தது இந்த படம். அதே போல் பெண் பிள்ளைகள் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமாகவும் இந்த படம் அமைந்தது.
இதை தொடர்ந்து சித்தார்த் நடித்து முடித்துள்ள 'மிஸ் யூ' திரைப்படம் இந்த வாரம் 29-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. சித்தார்த் திரையுலகில் ஒரு பக்கம் பிசியாக இருந்த நிலையில் தற்போது திருமண வாழ்க்கையிலும் பிசியாகி உள்ளார்.
கங்குவா தோல்வியால் மன அழுத்தத்தில் சூர்யா? கோவில் கோவிலாக சுற்றும் ஜோதிகா!
ஏற்கனவே மேக்னா என்பவரை திருமணம் செய்து கொண்டு, சில வருடத்திலேயே அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்த சித்தார்த், இதை தொடர்ந்து ஸ்ருதி ஹாசன்,ஸ் சமந்தா போன்ற நடிகைகளுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார்.
இந்த இரண்டு காதலும், 2 வருடம் கூட தாங்கிப்பிடிக்காத நிலையில்... கடந்த சில வருடங்களாக நடிகை அதிதி ராவுடன் டேட்டிங் செய்து வந்தார். மும்பை மற்றும் ஹைதராபாத்தில் தனியாக வீடு எடுத்து இருவரும் லிங்க் டூ கெதர் வாழ்க்கை முறையில் வாழ்ந்து வந்த நிலையில், இந்த ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
டபுள் சந்தோஷத்தில் நாகார்ஜூனா; இளைய மகனுக்கு நடந்து முடிந்த நிச்சயம்! Viral Pics!
இவர்களின் திருமணம், அதிதி ராவ் குடும்ப முறைப்படி... அவருடைய புராதான கோவிலில் நடந்தது. இதில் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். தற்போது திருமணத்தின் போது எடுத்து கொண்ட சில புகைப்படங்களை அதிதி ராவ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட அது வைரலாகி வருகிறது.