
கங்குவா பில்டப் ஓவர்:
Suriya 45 Movie kick Starts with Pooja : பாகுபலி ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்கப்பட்டு மொக்க வாங்கிய படம் சூர்யாவின் கங்குவா. இந்தப் படம் ரூ.2000 கோடி வரையில் வசூல் குவிக்கும் என்று சூர்யா பேசியிருந்தார். இந்திய சினிமாவை வியந்து பார்க்கும் ஒரு படமாக கங்குவா இருக்கும் என்று அப்படி இப்படி என்று கொஞ்சம் ஓவராகவே பேசியிருந்தார்.
கடைசியில் கங்குவா எதிர்மறையாக விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில் ஆளாளுக்கு படத்திற்கு ஆதரவாக போர்க்கொடி தூக்கும் நிலை தான் வந்தது. ரூ. 350 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.100 கோடி மட்டுமே வசூலித்து மோசமான சாதனை பட்டியலில் இடம் பெற்றது
வெற்றிக்காக போராடி வரும் சூர்யா:
கடந்த 11 ஆண்டுகளாக வெற்றிக்காக போராடி வரும் சூர்யா அடுத்து பெரிதாக நம்பியிருக்கும் படம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் சூர்யா 44. இந்தப் படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படாத நிலையில் அடுத்ததாக ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் சூர்யா 45 படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
சூர்யா 45 பூஜை:
இந்த நிலையில் தான் சூர்யா 45 படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. டிரீம் வாரியர்ஸ் பிக்ஸர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். சூர்யா மற்றும் த்ரிஷா இருவரும் இணைந்து ஆறு படத்தில் நடித்திருந்த நிலையில் 19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சூர்யா 45 படத்தில் இணைந்துள்ளனர்.
சூர்யா 45 Fantasy Devotional மூவி:
இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். முழுக்க முழுக்க Fantasy Devotional தொடர்பான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் சூர்யா 45 படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள மாசாணி அம்மன் கோயிலில் படத்திற்கான பூஜை போடப்பட்டுள்ளது.
சூர்யா 45 மூவி பூஜை மாசாணி அம்மன் கோயில்:
இந்த பூஜையில் சூர்யா, ஆர்ஜே பாலாஜி, த்ரிஷா ஆகியோர் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், சூர்யா நீட்டிக் கொண்டிருந்த கேமராவின் ஹேண்ட் யாரையும் இடித்து விடக் கூடாது என்பதற்காக அதனை டெக்னீசியனை அழைத்து சரி செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
சூர்யா 45 பட டைட்டில்
ஆன்மீகத்தை மையப்படுத்திய சூர்யா 45 படத்திற்கு மாசாணி அம்மன் டைட்டில் வைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் பூஜைக்கு முன்னதாக சூர்யா கோயில் கோயிலாக சென்று வரும் புகைப்படங்களை பார்த்திருப்போம். நேற்று முன் தினம் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து கர்நாடகாவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
இதையடுத்து ஜோதிகா இன்று தனியாக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்துள்ளார். அதற்கும் முன்னதாக சூர்யா மற்றும் சிவா இருவரும் வேலூர் ராணிப்பேட்டையில் உள்ள சோளிங்கர் யோக நரசிம்மர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்ஜே பாலாஜி படங்கள்:
எல்கேஜி படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமான ஆர்ஜே பாலாஜி மூக்குத்தி அம்மன் படம் மூலமாக இயக்குநராக அவதாரம் எடுத்தார். அதன் பிறகு வீட்ல விசேஷம் படத்தை இயக்கிய நிலையில் இப்போது சூர்யா 45 படத்தை இயக்குகிறார். ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள சொர்க்கவாசல் படம் வரும் 29 ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.