ரசிகர்களின் பொறுமையை சோதிக்க போகிறதா புஷ்பா 2? மலைக்க வைக்கும் ரன்னிங் டைம்

Published : Nov 27, 2024, 02:45 PM IST

Pushpa 2 Movie Running Time : சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாக உள்ள புஷ்பா 2 திரைப்படத்தின் ரன்னிங் டைம் லீக் ஆகி உள்ளது.

PREV
14
ரசிகர்களின் பொறுமையை சோதிக்க போகிறதா புஷ்பா 2? மலைக்க வைக்கும் ரன்னிங் டைம்
Pushpa 2

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி சக்கைப்போடு போட்ட படம் புஷ்பா. சுகுமார் இயக்கிய இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் செம்மரக் கடத்தல் காரனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்திருந்த இப்படத்தில் நடிகை சமந்தா ஐட்டம் சாங்கும் ஆடி இருந்தார். இதனால் பான் இந்தியா அளவில் மாஸ் ஹிட் அடித்தது புஷ்பா திரைப்படம். இப்படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடித்திருந்தார்.

24
Allu Arjun

புஷ்பா படத்தின் அதிரிபுதிரியான வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது. சுமார் 350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. புஷ்பா 2 திரைப்படம் வருகிற டிசம்பர் 4-ந் தேதி பான் இந்தியா அளவில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. அப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அதற்கான புரமோஷன் பணிகளும் சூடுபிடித்துள்ளன.

இதையும் படியுங்கள்... 2024-ல் பிரம்மாண்ட படங்களை பாக்ஸ் ஆபிஸில் பதம் பார்த்த டாப் 5 சிறு பட்ஜெட் மூவீஸ்

34
Pushpa The Rule

புஷ்பா முதல் பாகத்தில் சமந்தா ஐட்டம் டான்ஸ் ஆடியதை போல் அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்போது தெலுங்கில் டிரெண்டிங் நாயகியாக இருக்கும் ஸ்ரீலீலா குத்தாட்டம் போட்டுள்ளார். அவர் ஆடியுள்ள கிஸ்ஸிக் என்கிற பாடல் அண்மையில் ரிலீஸ் ஆகி யூடியூப்பில் செம வைரலாகி வருகிறது. புஷ்பா 2 படத்திற்கான முன்பதிவும் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புஷ்பா 2 படத்தின் ரன்னிங் டைம் விவரம் வெளியாகி உள்ளது.

44
Pushpa 2 Running Time

அதன்படி இப்படம் 3 மணிநேரம் 21 நிமிடம் ஓடக்கூடிய அளவு மிகப்பெரிய ரன்னிங் டைம் கொண்டுள்ளது. அதில் முதல் பாதி 1 மணிநேரம் 40 நிமிடமும், இரண்டாம் பாதி 1 மணிநேரம் 41 நிமிடமும் ஓடும் என கூறப்படுகிறது. படம் 3 மணிநேரம் ஓடினாலே ரசிகர்கள் பொறுமை இழந்துவிடுவார்கள். அதில் புஷ்பா 2 படம் அதற்கு மேல் ஓடுவதால், திரைக்கதை சற்று டல் அடித்தாலும் படம் சொதப்ப அதிக வாய்ப்புகள் உள்ளதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

இதையும் படியுங்கள்... என்னுடைய 2 விவாகரத்துக்கும் காரணமே அப்பா தான்! வனிதா விஜயகுமார் எமோஷ்னல் பகிர்வு!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories