பேச்சுலர் வாழ்க்கைக்கு எண்டு – 47 வயதில் குடும்ப வாழ்க்கையில் ஐக்கியமான நடிகர்!

First Published | Nov 27, 2024, 2:03 PM IST

Telugu Actor Subbaraju Marriage : இத்தனை ஆண்டுகாலமாக பேச்சுலராக இருந்து இப்போது குடும்ப வாழ்க்கையில் ஐக்கியமான நடிகரைப் பற்றி பார்க்கலாம் வாங்க…

Telugu Actor Subbaraju Marriage

தமிழ் சினிமாவில் இப்போது நடிகர், நடிகைகள் திருமணம் திருமணம் செய்து கொள்வதும், விவாகரத்து பெற்றுக் கொள்வதும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடிகை ரம்யா பாண்டியன் திருமணம் செய்து கொண்டார். இப்போது இட்லி கடை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமண பந்தத்தில் இணைந்தார்.

கீர்த்தி சுரேஷூம் விரைவில் திருமண உறவில் இணைய இருக்கிறார். இந்த நிலையில் தான் தெலுங்கு சினிமாவில் குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகர்களில் ஒருவராக இருக்கும் பென்மேட்சா சுப்பராஜூ தற்போது திருமணம் செய்து கொண்டு பேச்சுலர் வாழ்க்கைக்கு எண்டு கார்டு போட்டுள்ளார்.

Telugu Actor Subbaraju Marriage

தெலுங்கு ரசிகர்களுக்கு இவரைப் பற்றிய அறிமுகம் தேவையில்லை என்றாலும் கூட தமிழ் சினிமாவில் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, போக்கிரி, சரவணா, ஆயுதம், ஆதி, பாகுபலி 2, அசுரகுரு ஆகிய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

Tap to resize

Telugu Actor Subbaraju Marriage

தற்போது 47 வயதான சுப்பாராஜூ தன்னுடைய பேச்சுலர் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து குடும்ப வாழ்க்கைக்கு ஆரம்ப புள்ளி வைத்துள்ளார். அவர் தனது மனைவியுடன் போஸ் கொடுக்கும் புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இறுதியாக வெற்றி பெற்றது, என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

Telugu Actor Subbaraju Marriage

கடந்த 2003 ஆம் ஆண்டு திரைக்கு வந்த கட்கம் என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். ஷார்ட் பீரியரிடில் சினிமாவில் தன்னை சிறந்த நடிகர்களில் ஒருவராக நிலை நிறுத்திக் கொண்டுள்ளார். பாகுபலி 2 படமே அவருக்கு சிறந்த நடிகருக்கான அங்கீகாரத்தை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!