நீங்க சொன்னது சரி தான்; 15 வருட காதலை வெளிப்படையா அறிவித்த கீர்த்தி சுரேஷ்; இனி டும் டும் டும்!

Published : Nov 27, 2024, 12:42 PM ISTUpdated : Nov 27, 2024, 12:49 PM IST

Keerthy Suresh Confirms Love Relationship With Antony Thattil : தனது 15 ஆண்டுகால காதலை கீர்த்தி சுரேஷ் வெளிப்படையாக அறிவித்த பதிவு இப்போது வைரலாகி வருகிறது.

PREV
15
நீங்க சொன்னது சரி தான்; 15 வருட காதலை வெளிப்படையா அறிவித்த கீர்த்தி சுரேஷ்; இனி டும் டும் டும்!
Keerthy Suresh announces Love Relationship With Antony Thattil

Keerthy Suresh Confirms Love Relationship With Antony Thattil : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்து இருப்பவர் நடிகை கீர்த்தி. ரஜினிகாந்த் உடன் கூட இணைந்து நடித்து விட்டார். இனி வேறென்ன வேண்டும். சினிமாவில் உச்சம் தொடும் அளவிற்கு இப்போது வளர்ந்து வருகிறார். தற்போது 32 வயதாகும் கீர்த்தி சுரேஷ் யாரை திருமணம் செய்து கொள்வார்? எப்போது கல்யாணம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வந்தது. மேலும், அவர் ஆண்டனி தட்டில் என்பவரை காதலித்து வருவதாகவும், அவரை தான் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வந்தது.

25
Keerthy suresh and Antony Thattil

ஆண்டனி தட்டில்:

அதுமட்டுமின்றி ஆண்டனி தட்டில் பற்றி அலசி ஆராய்ந்த போது அவர் துபாயை சேர்ந்த தொழிலதிபர் என்று தெரிய வந்தது. ஆனால், சொந்த ஊர் கேரளாவாம். கேரளாவில் ஆண்டனி தட்டில், கொச்சி மற்றும் துபாயில் தொழிலதிபராக உயர்ந்துள்ளார். இவருக்கு கேரளா மற்றும் துபாயில் கோடிக்கணத்தில் சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

35
Keerthy Suresh, Keerthy Suresh Confirms Love Relationship With Antony Thattil

ஆண்டனி தட்டில் பிஸினஸ்:

கைபாலத் ஹபீப் ஃபரூக்குடன் சேர்ந்து, சென்னையில் பதிவு செய்யப்பட்ட ஆஸ்பெரோஸ் விண்டோ சொல்யூஷன்ஸின் முதன்மை உரிமையாளராக உள்ளார். கீர்த்தி சுரேஷ் எப்போது ஆக்டிவாக இருக்கும் குணம் கொண்டவர். ஆனால், அவருக்கு ஜஸ்ட் ஆப்போசிட்டானவர் தான் ஆண்டனி தட்டில். கூச்ச சுபாவம் கொண்டவராம். இருவரும் வெளியில் ஒன்றாக சுற்றியது கூட கிடையாதாம்.

45
Who is Antony Thattil, Keerthy Suresh Confirms Love Relationship With Antony Thattil

ஸ்கூல்டேய்ஸ் நண்பர்கள்:

சிறு வயது முதலே நண்பர்களாக இருந்து வந்த நிலையில் கொச்சியில் இளங்கலைப் படிப்பைத் தொடர்ந்தபோது தான் நட்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக பொத்தி பொத்தி வளர்ந்து வந்த நிலையில் இன்று வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார். இது குறித்து கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

காதலை வெளிப்படுத்திய கீர்த்தி சுரேஷின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

இருவரும் பின்புறமாக திரும்பி சூரியனை பார்ப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு 15 வருடம் மற்றும் கவுண்டிங் என்று குறிப்பிட்டு அது எப்போதும் ஆண்டனி கீர்த்தி AntoNY x KEerthy ( Iykyk) என்று பதிவிட்டுள்ளார். மேலும், உங்களுக்கு தெரிந்தால் உங்களுக்கு தெரியும் என்று பதிவிட்டுள்ளார்.

55
Keerthy Suresh and Antony Thattil Marriage Date

கீர்த்தி சுரேஷூக்கு வாழ்த்து:

இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதன் மூலமாக இத்தனை ஆண்டுகளாக மூடி மறைத்த தன்னுடைய இன்று கீர்த்தி சுரேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இனி அவரோட திருமண தேதிதான். ஏற்கனவே கீர்த்தி - ஆண்டனி திருமணம் டிசம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியிருந்தது.

ஒருவேளை இதுவும் உண்மையான தகவலாக கூட இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதில் இதில் கீர்த்தி மற்றும் ஆண்டனி தட்டிலின் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories