Published : Nov 27, 2024, 01:46 PM ISTUpdated : Nov 27, 2024, 01:50 PM IST
Top 5 Small Budget Hit Movies : 2024-ம் ஆண்டு முடிவுக்கு வர உள்ள நிலையில், இந்த ஆண்டு கம்மி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு கலெக்ஷனில் தூள் கிளப்பிய டாப் 5 படங்கள் பற்றி பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு ஆச்சர்யங்கள் நிறைந்த ஒரு ஆண்டாகவே உள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2, கங்குவா போன்ற படங்களெல்லாம் பிளாப் ஆனது ஒருபுறம் பேரதிர்ச்சியாக இருந்தாலும், மறுபுறம் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பட்டிதொட்டியெங்கும் ஹிட்டான படங்கள் நிறைய உள்ளன. அவற்றில் இருந்து டாப் 5 படங்களை பார்க்கலாம்.
26
Lover
லவ்வர்
குட் நைட் படத்தின் வெற்றிக்கு பின்னர் மணிகண்டன் ஹீரோவாக நடித்த படம் லவ்வர். இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்தது. அதுவும் ரஜினியின் லால் சலாம் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆனது. லால் சலாம் படத்தால் லவ்வர் படம் காணாமல் போகும் என கூறப்பட்ட நிலையில், ரிசல்ட் அப்படியே தலைகீழாக மாறி, பாக்ஸ் ஆபிஸில் லால் சலாம் படத்தை பதம் பார்த்தது லவ்வர். 5 கோடிக்கும் கம்மியான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தயாரிப்பாளருக்கு 13 கோடி லாபம் ஈட்டி கொடுத்தது.
36
Maharaja
மகாராஜா
விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் மாதம் திரைக்கு வந்த படம் மகாராஜா. இப்படத்தை நிதிலன் இயக்கி இருந்தார். கிரைம் த்ரில்லர் படமான இது வெறும் 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. அதுமட்டுமின்றி இம்மாத இறுதியில் சீனாவில் மகாராஜா திரைப்படம் 40 ஆயிரம் திரைகளில் ரிலீஸ் ஆக உள்ளது. அங்கு பிக் அப் ஆனால் ஆயிரம் கோடி வசூலையும் இப்படம் எட்ட வாய்ப்புள்ளது.
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் திரைக்கு வந்த படம் வாழை. இப்படத்தை வெறும் 10 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருந்தனர். திரையரங்குகளில் சக்கைப் போடு போட்ட வாழை திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.30 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது.
56
demonte colony 2
டிமாண்டி காலனி 2
கோப்ரா படத்தின் தோல்விக்கு பின் கம்பேக் கொடுக்க வேண்டும் என்கிற வெறியோடு இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கிய படம் தான் டிமாண்டி காலனி 2. இப்படம் சுமார் 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15ந் தேதி திரைக்கு வந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி 80 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.
66
lubber Pandhu
லப்பர் பந்து
2024-ம் ஆண்டு வெளியான சிறு பட்ஜெட் படங்களில் அதிக லாபம் ஈட்டித் தந்த படம் என்றால் அது லப்பர் பந்து திரைப்படம் தான். இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தை தமிழரசன் பச்சைமுத்து இயக்கி இருந்தார். வெறும் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 50 கோடிக்கு மேல் வசூலித்து மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது.