வசமாக சிக்கிய நயன்தாரா; நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published : Nov 27, 2024, 12:38 PM IST

Dhanush Filed case against Nayanthara : நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

PREV
14
வசமாக சிக்கிய நயன்தாரா; நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Nayanthara, Dhanush

நடிகை நயன்தாரா தன்னுடைய திருமணத்தையும் திரை வாழ்க்கையையும் ஆவணப்படமாக எடுத்து அதை நெட்பிளிக்ஸில் ரிலீஸ் செய்திருந்தார். நயன்தாரா பியாண்டு தி ஃபேரிடேல் என்கிற பெயரில் இந்த ஆவணப்படம் ரிலீஸ் ஆகி இருந்தது. இந்த ஆவணப்படம் வெளிவரும் முன்னர் அதன் டிரைலர் வெளியானபோது அதில் நானும் ரெளடி தான் படத்தின் 3 விநாடி காட்சிகள் இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டி அதை நீக்காவிட்டால் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என நடிகர் தனுஷ் தரப்பில் இருந்து நயனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

24
Dhanush vs Nayanthara

தங்களிடம் உரிய அனுமதி வாங்காமல் அந்த வீடியோ காட்சியை பயன்படுத்தி இருப்பதால் தனுஷ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார். இதனால் கொந்தளித்த நயன்தாரா, நடிகர் தனுஷை தாக்கி மூன்று பக்கத்திற்கு அறிக்கை வெளியிட்டார். தன் ஆவணப்படத்தை புரமோட் செய்வதற்காக நயன்தாரா இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக விமர்சனமும் எழுந்தது. தனுஷின் இந்த வார்னிங்கிற்கு பின் வெளியான ஆவணப்படத்தில் நானும் ரெளடி தான் படத்தின் ஷூட்டிங் சமயத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் 30 விநாடிகளுக்கு மேல் இடம்பெற்று இருந்தன.

இதையும் படியுங்கள்... தனுஷ்ஷின் ரோலக்ஸ் வாட்ச் விலை இத்தன கோடியா? 2 BHK வீடே வாங்கலாம் போல!!

34
Nayanthara Documentary

இதைப்பார்த்த ரசிகர்கள் தனுஷிடம் அனுமதி வாங்கி தான் இந்த காட்சிகளை நயன்தாரா தன் ஆவணப்படத்தில் வைத்தாரா என கேள்வி எழுப்பி வந்தனர். ரசிகர்கள் சந்தேகித்ததை போல் தனுஷிடம் எந்தவித அனுமதியும் வாங்காமல் தான் அந்த காட்சியை ஆவணப்படத்தில் வைத்திருக்கிறார் நயன்தாரா. அது தற்போது தனுஷ் தொடர்ந்துள்ள வழக்கின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தன்னிடம் அனுமதி வாங்காமால் வீடியோவை பயன்படுத்தி இருப்பதாக தனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.

44
Dhanush Filed case against Nayanthara

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக விக்னேஷ் சிவன், நயன்தாரா மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு உள்ளது. தனுஷின் எச்சரிக்கையும் மீறி நயன்தாரா அந்த வீடியோவை பயன்படுத்தி இருப்பதால் அவர் நஷ்ட ஈடு கொடுக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. நயன்தாராவின் அறிக்கைக்கு இதுவரை எந்தவித பதிலும் அளிக்காமல் உள்ள தனுஷ், நேரடியாக ஆக்‌ஷனில் இறங்கி இருப்பதால் இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

இதையும் படியுங்கள்... அப்பா எழுதி; அம்மா நடித்த பாடலை க்யூட்டாக பாடிய விக்கி - நயன் மகன்கள்

Read more Photos on
click me!

Recommended Stories