விஷாலை போட்டிபோட்டு லவ் பண்ணும் 2 பெண்கள்? பிக்பாஸில் உருவான காத்துவாக்குல ரெண்டு காதல்!

First Published | Nov 27, 2024, 12:02 PM IST

Bigg Boss Tamil Season 8 : பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள விஜே விஷால் மீது இரண்டு பெண்கள் காதல் வயப்பட்டுள்ளதாக பரவலாக பேசப்படுகிறது.

Bigg Boss Tamil season 8

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே காதலுக்கு பஞ்சம் இருக்காது. இதற்கு முந்தைய சீசன்களைப் போல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனிலும் காதல் புறாக்கள் வலம் வருகின்றன. இந்த சீசனில் முதன்முதலில் உருவான காதல் ஜோடி என்றால் அது விஷால் மற்றும் தர்ஷிகா தான். அவர்கள் இருவரும் கடந்த சில வாரத்திற்கு முன் நடைபெற்ற ஸ்கூல் டாஸ்கில் காதலர்களாக நடித்திருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு அது உண்மையான காதலாகவே மாறியது.

Tharshika, VJ Vishal

தற்போது விஷாலை துரத்தி துரத்தி காதலித்து வருகிறார் தர்ஷிகா. விஷாலும் தர்ஷிகா உடன் ரொமாண்டிக் ஆக பேசி வந்தாலும் தனக்குள் காதல் இல்லை என்பதை பிற போட்டியாளர்களிடம் சொல்லி வருகிறார். இது ஒருபுறம் இருக்க, விஷாலும் அன்ஷிதாவும் காதலிப்பதாக புது புரளி ஒன்று நேற்று பிக்பாஸ் வீட்டில் கிளம்பியது. இதைப்பார்த்த ரசிகர்கள் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் வருவது போல் பிக் பாஸ் வீட்டில் இப்படி ஒரு காதலா என ட்ரோல் செய்து வந்தனர்.

இதையும் படியுங்கள்... கம்பேக் கொடுக்கும் கமல்; பிக் பாஸில் இருந்து விலகுகிறாரா விஜய் சேதுபதி?

Tap to resize

Anshitha, VJ Vishal

இதுகுறித்து பவித்ரா மற்றும் ஆர்.ஜே.ஆனந்தி இருவரும் அன்ஷிதாவிடமே ஓப்பனாக கேட்டுவிட்டனர். இதைக் கேட்டதும் கண்ணீர்விட்டு அழுதுவிட்டார் அன்ஷிதா. தான் விஷாலை நல்ல நண்பனாக மட்டுமே பார்த்து வருகிறேன். அவரை எப்படி நான் காதலித்தேன் என்று உங்களுக்கு தோன்றியது என கேட்டு தேம்பி தேம்பி அழுததோடு, தான் ஏற்கனவே காதலில் அடிவாங்கியதால் மறுபடியும் அந்த தவறை செய்யமாட்டேன் என்று கூறி தன்னைப் பற்றிய காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

Tharshika Loves VJ Vishal

பிக் பாஸ் வீட்டில் காதல் மோகத்தில் சுற்றிவரும் தர்ஷிகா, இதனால் கேமில் கோட்டைவிட்டுவிடுவாரோ என்கிற பயத்தில் அவரின் தோழிகளான ஆனந்தி மற்றும் பவித்ரா இருந்தாலும் அதையெல்லாம் பற்றி கவலைப்படமால் விஷால் உடன் ரொமான்ஸை தொடர்ந்து வருகிறார் தர்ஷிகா. பிக் பாஸ் வீட்டில் பரபரப்பாக பேசப்பட்ட காதல் ஜோடி என்றால் அது கவின் - லாஸ்லியா தான். அப்படி உருகி உருகி காதலித்த அந்த ஜோடியே ஒன்று சேராமல் பிரிந்துவிட்டனர். அவர்கள் நிலைமை விஷால் - தர்ஷிகாவுக்கு வராமல் இருந்தால் சரி என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... கங்குவா தோல்வியால் மன அழுத்தத்தில் சூர்யா? கோவில் கோவிலாக சுற்றும் ஜோதிகா!

Latest Videos

click me!