Jyothika Tirupati Visit : சூர்யா நடித்த கங்குவா படம் தோல்வி அடைந்ததால் அவர் மன உளைச்சலில் இருப்பதாகவும் நிம்மதி வேண்டி கோவில் கோவிலாக ஜோதிகாவுடன் சென்று வருவதாகவும் கூறப்படுகிறது.
சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கிய இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். தமிழ் சினிமாவில் ஒரு பாகுபலி என்கிற ரேஞ்சுக்கு பில்டப் உடன் கடந்த நவம்பர் 14-ந் தேதி திரைக்கு வந்தது கங்குவா. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இப்படம் சொதப்பலான திரைக்கதையின் காரணமாக படுதோல்வியை சந்தித்தது. 350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 100 கோடி மட்டுமே வசூலித்து வாஷ் அவுட் ஆகி உள்ளது.
24
Suriya, Jyothika
கங்குவா படத்தின் தோல்வி நடிகர் சூர்யாவை மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மன நிம்மதி வேண்டி தொடர்ந்து கோவில் கோவிலாக சென்று வருகிறார் சூர்யா. அந்த வகையில் கடந்த வாரம் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை அடுத்த சோளிங்கரில் உள்ள யோக நரசிம்மர் கோவிலுக்கு கங்குவா படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா உடன் சென்று சாமி தரிசனம் செய்தார் சூர்யா.
அதைத் தொடர்ந்து நேற்று முன் தினம் சூர்யாவும் ஜோதிகாவும் ஜோடியாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது சூர்யாவின் முகம் வாடிப் போய் இருந்ததை பார்த்த ரசிகர்கள், அவர் மிகவும் மன உளைச்சலில் இருப்பதாக கூறி வந்தனர். அவரின் இந்த நிலைக்கு கங்குவா படத்தின் தோல்வியும், அதற்கு வந்த நெகடிவ் விமர்சனங்களுமே காரணம் என கூறப்படுகிறது.
44
jyothika Visit Tirupati Temple
கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சூர்யாவுடன் சென்ற ஜோதிகா, இன்று தனியாக வந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதிகாலை பூஜையில் கலந்துகொண்ட ஜோதிகாவுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டது. இதையடுத்து கோவிலில் இருந்து வெளியே வந்த ஜோதிகாவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஏழுமலையான் புகைப்படத்தை பரிசாக வழங்கினர். அதை அன்போடு ஏற்றுக்கொண்ட ஜோதிகா, அவர்களுடன் புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தார்.