
நெப்போடிசம் என்பது பாலிவுட்டில் ஹாட் டாப்பிக் ஆக இருந்தாலும், கோலிவுட்டில் அதை பெரிய பொருட்டாக யாரும் எடுத்துக் கொள்வதில்லை. ஏனெனில் இங்கு திறமை இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி பிறக்கும் போதே உச்ச நட்சத்திரத்தின் மகளாக பிறந்து, ஒரு இயக்குனராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள போராடி வரும் ஒரு பெண் இயக்குனரைப் பற்றி தான் தற்போது பார்க்க உள்ளோம். அவரின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
அந்த பெண் இயக்குனர் வேறுயாருமில்லை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தான். பார்ன் வித் கோல்டன் ஸ்பூன் என்பதைப் போல் பிறக்கும் போதே சூப்பர்ஸ்டாரின் மகளாக பிறந்த ஐஸ்வர்யாவுக்கு கோலிவுட்டில் வெற்றி என்பது எட்டாக் கனியாகவே உள்ளது. அப்பா சூப்பர்ஸ்டாராக இருந்தாலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமாவில் படிப்படியாக தான் முன்னேறி வந்துள்ளார். இவர் இயக்குனராகும் முன் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
அதன் பின்னரே 3 படம் மூலம் இயக்குனராக களமிறங்கினார். அவர் நினைத்திருந்தால் முதல் படத்திலேயே தன் தந்தையை நடிக்க வைத்திருக்க முடியும். ஆனால் தன்னுடைய சுய லாபத்திற்காக சூப்பர்ஸ்டாரின் இமேஜை டேமேஜ் செய்துவிடக் கூடாது என்பதற்காக ரஜினியின் எந்தவித உதவியும் இன்றி 3 படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா. அப்படம் ரிலீஸ் ஆகும் முன்னரே அதற்கு உலகளவில் எதிர்பார்ப்பு இருந்தது. காரணம் அப்படத்தில் இடம்பெற்ற கொலவெறி பாடல் தான்.
ஒய் திஸ் கொலவெறி பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனதால் 3 படம் மீது பலரின் கவனமும் திரும்பியது. அதுவே அப்படத்தின் தோல்விக்கு காரணமாகவும் அமைந்தது. எதிர்பார்ப்பின்றி ரிலீஸ் ஆகி இருந்தால் 3 படம் ஹிட்டாகி இருக்க அதிக வாய்ப்பு உண்டு. ரிலீஸ் சமயத்தில் அப்படத்தை கொண்டாடத் தவறிய ரசிகர்கள் அது அண்மையில் ரீ ரிலீஸ் ஆனபோது கொண்டாடித் தீர்த்தனர்.
இதையும் படியுங்கள்... விவரிக்க முடியாத உறவு அது; அரசியல் வாரிசுடன் நெருக்கமானது பற்றி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓபன் டாக்
பின்னர் வை ராஜா வை என்கிற படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா. அப்படமும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காததால் சினிமாவுக்கு சில ஆண்டுகள் ரெஸ்ட் விட்டு விலகினார். பின்னர் 2023-ம் ஆண்டு மீண்டும் கம்பேக் கொடுத்த அவர், லால் சலாம் எனும் படத்தை இயக்கினார். அப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் கேமியோ ரோலில் நடித்திருந்தார். ரஜினி நடித்திருந்ததால் சூப்பர்ஸ்டார் படமாகவே லால் சலாம் பார்க்கப்பட்டது.
ஆனால் படம் சூப்பர்ஸ்டார் ரசிகர்களுக்கு தீனி போடும் விதமாக இல்லாததால் இப்படமும் தோல்வியை தழுவியது. சூப்பர்ஸ்டார் மகளாகவே இருந்தாலும் சினிமாவில் அவருக்கு வெற்றி என்பது இன்னும் எட்டாக் கனியாகவே உள்ளது. சினிமா வாழ்க்கை தான் இப்படி என்றால், ஐஸ்வர்யாவுக்கு சொந்த வாழ்க்கையும் சோகங்கள் நிறைந்ததாகவே உள்ளது.
இவர் நடிகர் தனுஷை கடந்த 2004-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணமாகி 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இந்த ஜோடி, தற்போது விவாகரத்து பெற்று பிரிந்துள்ளது. மகள் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என சூப்பர்ஸ்டாரும் சோகத்தில் இருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யாவை மகளாக பார்ப்பதில்லை. அவரை தன் தாயாகவே கருதுகிறார். ஏனெனில் தன் தாயைபோல் தன்னை பார்த்துக் கொள்வது ஐஸ்வர்யா தான் என்பதால் அவரை தன் தாய் என்று பல இடங்களில் ஓப்பனாகவே குறிப்பிட்டுள்ளார் ரஜினிகாந்த். இப்படி ரஜினியின் பாசமிகு மகளாக இருக்கும் ஐஸ்வர்யாவின் குழந்தை பருவ புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... தனுஷ்ஷின் ரோலக்ஸ் வாட்ச் விலை இத்தன கோடியா? 2 BHK வீடே வாங்கலாம் போல!!